பிரியங்கா மோகனின் ‛மேட் இன் கொரியா' | பாலாஜி மோகன், அர்ஜுன் தாஸ் இணையும் ‛லவ்' | சூரியை கதாநாயகனாக வைத்து படம் இயக்கும் சுசீந்திரன் | கோர்ட் ஸ்டேட் vs நோ படி படத்தின் தமிழ் ரீமேக் புதிய அப்டேட் | 2025, இந்தியாவில் 500 கோடி கடந்த இரண்டாவது படம் 'காந்தாரா சாப்டர் 1' | பேட்ரியாட் படப்பிடிப்புக்காக லண்டன் கிளம்பிய மம்முட்டி | போன வாரமும் ஏமாற்றம் : தீபாவளியாவது களை கட்டுமா? | அக்கா, தங்கை, அம்மாவாக நடிப்பேன்: ரஜிஷா விஜயன் | அல்லு அர்ஜுன் ரசிகர் மன்றம் பதிவுடன் ஆரம்பம் | அன்றும்... இன்றும்... மணிகண்டனின் தன்னம்பிக்கைப் பதிவு |
நடிகர் சந்தானம் நடித்து முடித்துள்ள திரைப்படம் 'கிக்'. இந்த படத்தை கன்னட இயக்குனர் பிரசாந்த் ராஜ் இயக்கி வருகிறார். இந்த படத்தின் மூலம் முதல்முறையாக கன்னடத்தில் சந்தானம் அறிமுகமாகிறார்.
இந்த படத்தில் கதாநாயகியாக தன்யா ஹோப் நடித்துள்ளார். நடிகை ராகினி திரிவேதி முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தமிழ் மற்றும் கன்னடம் என இருமொழிகளில் உருவாகும் இப்படத்தை சர்க்கல் பாக்ஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்து வருகிறது. பிரபல கன்னட இசையமைப்பாளர் அர்ஜூன் ஜன்யா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
விரைவில் வெளியாகவுள்ள இப்படத்தின் தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் டப்பிங்கை சந்தானம் நிறைவு செய்துள்ளார். தற்போது டப்பிங் புகைப்படங்களை படக்குழு வெளியிட்டுள்ளது.