ராம நவமியை முன்னிட்டு 'ஆதி புருஷ்' பட புதிய போஸ்டர் வெளியீடு | 200 சவரன் நகை கொள்ளை - புதிய புகார் அளித்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த்! | மணிரத்னத்தின் மீதான வழக்கு தள்ளுபடி | ஸ்கை டைவிங்கில் அசத்திய அஞ்சு குரியன் | பிரதமரை சந்தித்த ஆஸ்கர் விருது வென்ற ‛தி எலிபன்ட் விஸ்பரர்ஸ்' ஆவணப்பட குழுவினர் | சமந்தா நடிப்பில் இருந்து ஓய்வு எடுக்கிறாரா? | மதுபான பிசினஸில் இறங்கிய ஷாரூக்கான் மகன் ஆரியன்கான்! | பொன்னியின் செல்வன் வெற்றியை தொடர்ந்து மருதநாயகத்தை தூசி தட்டும் கமல் | எடப்பாடி பழனிச்சாமிக்கு வாழ்த்து சொன்ன அஜித்குமார் | தீண்டாமை பிரச்னையா : தியேட்டர் நிர்வாகம் விளக்கம் ; ஊழியர்கள் மீது வழக்குபதிவு |
யூ-டியூப் சேனல்களில் வீஜேவாக அறிமுகமான பார்வதி சர்வைவர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மிகவும் பிரபலமானார். இன்று பல சினிமா நிகழ்வுகளை தொகுத்து வழங்கி வருகிறார். தன் மீதான விமர்சனங்களை புறந்தள்ளிவிட்டு தொடர்ந்து முன்னேறி வரும் பார்வதி, தற்போது தனது கனவு காரான ஜீப் கம்பெனியின் காம்பஸ் ரக காரை வாங்கி, தனது குடும்பத்தினருடன் மகிழ்ச்சியில் திளைக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அத்துடன் மறைந்து போன அவரது தந்தையின் ஆசியை குறித்தும் உருக்கமாக பதிவிட்டுள்ளார். பார்வதி வாங்கியிருக்கும் காரின் அடிப்படை ஆரம்பர விலையே 21 லட்சத்துக்கு மேல். அவரது இந்த முன்னேற்றத்தை கண்டு மகிழ்ச்சியடைந்துள்ள ரசிகர்கள் அவர் மேலும் மேலும் வளர வேண்டும் என வாழ்த்தி வருகின்றனர்.