தாதா சாகேப் பால்கே விருது பெற்றார் மோகன்லால் : கனவிலும் நினைக்கவில்லை என நெகிழ்ச்சி | தேசிய விருது பெற்றனர் ஷாரூக்கான், ராணி முகர்ஜி, எம்எஸ் பாஸ்கர், ஜிவி பிரகாஷ், ஊர்வசி | இட்லி கடை படத்திற்கு தணிக்கை குழு ‛யு' சான்றிதழ் | 100 கோடி லாபத்தில் 'லோகா' | ஹிந்தியில் அறிமுகமாகும் அர்ஜுன் தாஸ் | சர்தார் 2 படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் | துருவ் விக்ரமுக்கு வாழ்த்து சொன்ன அனுபமா பரமேஸ்வரன் | மீண்டும் படம் இயக்கும் தம்பி ராமையா மகன் உமாபதி | தாய்மையை அறிவித்த கத்ரினா கைப் | 'காந்தா சாப்டர் 1 டிரைலர்' : கன்னடத்தை விட ஹிந்தியில் அதிக வரவேற்பு |
டிக் டாக் மூலம் பிரபலமான தனலெட்சுமி இந்த முறை பிக்பாஸ் வீட்டில் மக்கள் தரப்பு போட்டியாளராக என்ட்ரி கொடுத்திருந்தார். நிகழ்ச்சியின் போது பல சர்ச்சைகளில் சிக்கியிருந்தாலும், பிக்பாஸ் வீட்டில் கடினமான போட்டியாளராக வலம் வந்த தனலெட்சுமியின் எவிக்சனை மக்களே ஏற்றுக்கொள்ளவில்லை. அவர் எலிமினேட் ஆன போது பெரிய அளவில் அவருக்கு சோஷியல் மீடியாக்களில் ஆதரவு எழுந்தது.
இந்நிலையில், நேற்றைய தினம் லைவ் வந்த தனலெட்சுமி, பிக்பாஸிலிருந்து எவிக்ட் ஆனதை ஏற்றுக்கொள்ள சில காலம் பிடித்ததாகவும் மேலும் வீட்டிலும் சில பிரச்னைகள் இருந்ததால் உடனடியாக லைவ் வர முடியவில்லை என்று விளக்கமளித்தார். அப்போது அவரிடம் வழக்கம் போல் பிக்பாஸ் வீடு மற்றும் சக போட்டியாளர்கள் பற்றி கேள்வி எழுப்பபட்டது. அதற்கு பதிலளித்த அவர், அசீம் தான் தனக்கு பிடித்த போட்டியாளர் என்றும் ரச்சிதாவும், கதிரும் தங்கள் உண்மை முகங்களை காட்டாமல் விளையாடி வருவதாகவும் கூறினார்.
விக்ரமன் குறித்து பேசிய தனலெட்சுமி, 'அவர் பிக்பாஸ் கேமில் தேவையில்லாத ஆள். லெட்டர் டாஸ்க் மற்றும் சில டாஸ்க்குகளை விக்ரமன் கேம் மாதிரி கொண்டு செல்லவில்லை' என்று கூறியுள்ளார். அசீம் மற்றும் விக்ரமன் குறித்த தனலெட்சுமியின் இந்த கருத்து சோஷியல் மீடியாவில் சூடான விவதாங்களை கிளப்பியுள்ளது.