'ஜனநாயகன்' லீக் : நாயகி தெரிவித்த கண்டனம், நாயகன் விஜய் அமைதி ஏன்? | இயக்குனர் ரஞ்சித்துக்கு ஜாமீன் வழங்கிய நீதிமன்றம் | மாமியாருக்கு பாய் பிரண்டு தேடும் சமீரா ரெட்டி | ஜனநாயகன் லீக் விவகாரம் ; தள்ளி வைக்கப்பட்ட சிரஞ்சீவி பட பூஜை | வெளிநாடுகளில் ரூ.400 கோடி வசூலைக் கடந்த 'துரந்தர் 2' | 2026 : 100 நாட்களில் 75 படங்கள் ரிலீஸ் | 'ஜனநாயகன்' லீக் : பல நடிகர்கள் வேண்டுகோள், நடவடிக்கை எடுக்கப்படுமா? | ஜனநாயகன் படம் லீக் ; அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது : ரஜினிகாந்த் | சிக்ஸ் பேக் உடன் தயாராகும் தனுஷ் மகன் : ஜி.வி.பிரகாஷ் தந்த அப்டேட் | 'பெத்தி' படத்தில் இளம் நாயகி? |

எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள துணிவு படம் வருகிற 11ம் தேதி திரைக்கு வருகிறது. இந்த நிலையில் அடுத்தபடியாக அஜித் 62வது படத்தின் படப்பிடிப்பு ஜனவரி 17ம் தேதி தொடங்கப்பட உள்ளது. விக்னேஷ் சிவன் இயக்கும் இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. இந்த அஜித் 62வது படத்தில் விஸ்வாசம் படத்தில் நடித்த நயன்தாராவே மீண்டும் நாயகியாக நடிப்பதாக கூறப்பட்ட நிலையில், கடந்த சில மாதங்களாக இப்படத்தில் திரிஷா நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி வந்தன.
ஆனால் இந்த படத்தில் ஹீரோயினுக்கு பெரிய அளவில் முக்கியத்துவம் இல்லாததால் முதலில் நயன்தாரா நடிக்க மறுத்து நிலையில் திரிஷாவும் நடிக்க மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. அதனால் தற்போது அஜித் 62 ஆவது படத்தில் அவருடன் ஏற்கனவே விவேகம் படத்தில் நடித்த காஜல் அகர்வால் நடிப்பதாக புதிய தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது. தற்போது காஜல் அகர்வால் கமலுடன் இந்தியன் -2 படத்தில் நடித்து வருகிறார்.