எதிர்பார்த்ததை விட பாசிட்டிவான விமர்சனங்கள் - விக்ரம் வெளியிட்ட வீடியோ! | பரபரப்பில்லாமல் இன்றைய வெளியீடுகள் | ஆறு மாதங்கள் தள்ளிப் போனது 'இட்லி கடை' | கார் பார்க்கிங் பிரச்னை : பிக்பாஸ் பிரபலம் தர்ஷன் கைது | இந்தியன் 3 படத்தின் பணிகள் மீண்டும் துவங்கியது | இறுதி கட்டத்தில் 'லவ் மேரேஜ்' | பிளாஷ்பேக் : இந்தியன் பனோரமாவில் திரையிடப்பட்ட முதல் தமிழ்படம் | பிளாஷ்பேக் : லலிதா, பத்மினிக்காக காத்திருந்த ரசிகர்கள் | ஆஸ்கர் விருது வரை சென்ற 'லபாட்டா லேடீஸ்' படம் கதை காப்பி சர்ச்சையில் சிக்கியது | சினிமா ஆனது இந்தியாவின் முதல் மகாத்மாவின் வாழ்க்கை |
ஜனவரி 11ம் தேதி விஜய் நடித்துள்ள 'வாரிசு', அஜித் நடித்துள்ள 'துணிவு' ஆகிய படங்கள் தியேட்டர்களில் வெளியாக உள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள பெரும்பாலான தியேட்டர்களில் இந்த இரண்டு படங்களும் வெளியாக உள்ளது.
பொதுவாக முன்னணி ஹீரோக்கள் நடிக்கும் படங்களுக்கு அதிகாலை 4 மணிக்கே சிறப்புக் காட்சிகள் நடைபெறுவது வழக்கம். ஆனால், 'வாரிசு, துணிவு' படங்களின் சிறப்புக் காட்சிகளை அதிகாலை 4 மணிக்கு நடத்த தியேட்டர்காரர்கள் தயக்கம் காட்டுவதாக செய்திகள் வெளிவந்துள்ளன. ஒரே சமயத்தில் இரண்டு படங்களையும் திரையிட்டால் தியேட்டர்களில் குவியும் அவர்களது தீவிர ரசிகர்களை கட்டுப்படுத்துவது சிரமம் என தியேட்டர்காரர்கள் நினைக்கிறார்களாம். மேலும், தியேட்டர்களில் ஏதாவது சேதம் ஏற்பட்டால் அது தங்களுக்கு பெரிய நஷ்டத்தை ஏற்படுத்தும் என்றும் கருதுகிறார்களாம்.
மல்டிபிளக்ஸ் தியேட்டர்களில் இரண்டு படங்களையும் ஒரே நேரத்தில் திரையிட முடியும். ஆனால், சிங்கிள் ஸ்கிரீன்களில் எந்தக் காட்சியை யாருக்கு முதலில் தருவது என்ற குழப்பம் நிலவுகிறதாம். எனவே, தேவையற்ற மோதல்களை சமாளிக்கும் விதமாக காலை 8 மணி காட்சியிலிருந்து படத்தை ஆரம்பிக்கலாமா எனவும் யோசித்து வருகிறார்களாம். நாளை முதல் இரண்டு படங்களுக்கும் முன்பதிவு ஆரம்பமாக உள்ள நிலையில் அதிகாலை சிறப்புக் காட்சிகள் குறித்து ஓரிரு நாளில் முடிவு செய்வார்கள் எனத் தெரிகிறது.