பரபரப்பில்லாமல் இன்றைய வெளியீடுகள் | ஆறு மாதங்கள் தள்ளிப் போனது 'இட்லி கடை' | கார் பார்க்கிங் பிரச்னை : பிக்பாஸ் பிரபலம் தர்ஷன் கைது | இந்தியன் 3 படத்தின் பணிகள் மீண்டும் துவங்கியது | இறுதி கட்டத்தில் 'லவ் மேரேஜ்' | பிளாஷ்பேக் : இந்தியன் பனோரமாவில் திரையிடப்பட்ட முதல் தமிழ்படம் | பிளாஷ்பேக் : லலிதா, பத்மினிக்காக காத்திருந்த ரசிகர்கள் | ஆஸ்கர் விருது வரை சென்ற 'லபாட்டா லேடீஸ்' படம் கதை காப்பி சர்ச்சையில் சிக்கியது | சினிமா ஆனது இந்தியாவின் முதல் மகாத்மாவின் வாழ்க்கை | 'பயர்' 50வது நாள் : சவாலான படங்களை தயாரித்து, இயக்க ஜே சதீஷ் குமார் முடிவு |
மங்காத்தா, மாநாடு உள்ளிட்ட படங்களை இயக்கிய வெங்கட் பிரபு தற்போது நாகசைதன்யா, கிர்த்தி ஷெட்டி, அரவிந்த்சாமி, ராதிகா ஆகியோர் நடிப்பில் கஸ்டடி என்ற படத்தை தமிழ், தெலுங்கில் இயக்கி வருகிறார். இளையராஜா , யுவன் சங்கர் ராஜா இணைந்து இசையமைக்கும் இந்த படத்தை சீனிவாசா சில்வர் ஸ்கிரீன் என்ற நிறுவனம் தயாரிக்கிறது.
காவல்துறை சம்பந்தப்பட்ட கதையில் உருவாகும் இதில் நாக சைதன்யா காவல்துறை அதிகாரியாக நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் தற்போது படத்தின் ரிலீஸ் குறித்த ஒரு போஸ்டரை வெளியிட்டுள்ளார் இயக்குனர் வெங்கட் பிரபு. அதில், 2023ம் ஆண்டு மே 12ல் கஸ்டடி படம் திரைக்கு வருவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்.