மலேசியா முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்த அஜித்குமார்! | தனுசை ஆச்சரியப்பட வைத்த இயக்குனர் விக்னேஷ் ராஜா! | 96 பட இயக்குனரிடம் கதை கேட்ட நானி | லிங்குசாமி, சரண் புதிய படத்திற்காக கூட்டணி | இதெல்லாம் டிசம்பர் மாதம் ரிலீஸ் : ரிசல்ட் எப்படி இருக்குமோ? | சின்மயி மன்னிப்பு : இயக்குனர் பேரரசு பதிலடி | கைவசம் 3 படங்கள் : தமிழில் கால் பதிக்க நினைக்கிறார் கிர்த்தி ஷெட்டி | கிண்டல், கேலி, நெகட்டிவ் எண்ணம் : சமூக வலைதளங்களை தவிர்க்கும் திரைபிரபலங்கள் | நல்ல படம் பண்ணிட்டு ரிட்டையர்டு : கமல்ஹாசன் | விஜய் பட இயக்குனர் உடன் இணையும் சல்மான் |

டிமான்டி காலனி, இமைக்கா நொடிகள், கோப்ரா போன்ற படங்களை இயக்கியவர் அஜய் ஞானமுத்து. தற்போது தனது முதல் படமான டிமான்டி காலனி படத்தின் இரண்டாம் பாகத்தை மீண்டும் அருள்நிதியை நாயகனாக வைத்து இயக்கி வருகிறார். பிரியா பவானி சங்கர் நாயகியாக நடிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த நவம்பர் மாதம் தொடங்கப்பட்டது.
இந்நிலையில் டிமான்டி காலனி 2 படம் குறித்து அஜய் ஞானமுத்து வெளியிட்டுள்ள செய்தியில், தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு 40 சதவீதம் முடிவடைந்துள்ளது. இந்த படப்பிடிப்பில் முக்கியத்துவம் வாய்ந்த காட்சிகள் படமாக்கப்பட்டு அனைத்து காட்சிகளுமே தனக்கு திருப்தியாக இருப்பதாக தெரிவித்திருப்பவர், படக்குழுவினருக்கும் நன்றி தெரிவித்துள்ளார். டிமான்டி காலனி படத்தின் முதல் பாகத்தைப்ப்போலவே இந்த இரண்டாம் பாகமும் திரில்லர் கதையில் உருவாகி வருகிறது.




