'மண்டாடி' : சூரியின் அடுத்த படம் | மருத்துவ கண்காணிப்பில் நடிகர் ஸ்ரீ... தவறான தகவல்களை பரப்பாதீங்க.... : குடும்பத்தினர் அறிக்கை | என்னை பற்றி என் தயாரிப்பாளர்களிடம் கேளுங்கள்: பாலிவுட் பாடகருக்கு ஏ.ஆர்.ரஹ்மான் பதில் | பிளாஷ்பேக் : மம்பட்டியான் பாணியில் உருவான கொம்பேரி மூக்கன் | தன்னை போன்று குறைபாடு உடையவரையே மணந்த அபிநயா | இளையராஜாவை தொடர்ந்து சிம்பொனி இசை அமைக்கும் இன்னொரு தமிழர் | அர்ஜுன் இளைய மகளுக்கு டும் டும் : இத்தாலி தொழில் அதிபரை மணக்கிறார் | பிளாஷ்பேக்: நாரதராக வாழ்ந்த நாகர்கோவில் மகாதேவன் | குட் பேட் அக்லி ஓடிடி-யில் வெளியாவது எப்போது | சூரி படத்துக்கு ஓடிடி-யில் இழுபறி |
சமீபத்தில் வெளியான லவ்டுடே படம் மூலம் பரபரப்பாக பேசப்பட்டவர் இயக்குனர் பிரதீப் ரங்கநாதன். இவரது இயக்கத்தில் முதல் படமாக உருவான கோமாளி படத்தில் ஜெயம் ரவி உடன் நடித்திருந்த கதாநாயகிகளில் ஒருவர் கன்னட நடிகை சம்யுக்தா ஹெக்டே. ஜெயம்ரவியுடன் பள்ளிப்பருவ காட்சிகளில் இணைந்து நடித்து ரசிகர்களின் வரவேற்பை பெற்ற இவர் அதன்பிறகு வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான மன்மதலீலை படத்திலும் கதாநாயகியாக நடித்திருந்தார். ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக அறிமுகமான கிரிக் பார்ட்டி படத்தில் தான் இவரும் கதாநாயகியாக அறிமுகமானார் என்பது பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
சினிமாவை தவிர்த்து நீச்சலில் மிகுந்த ஆர்வம் கொண்ட சம்யுக்தா ஹெக்டே தற்போது ஆழ்கடலில் டைவிங் செய்து அதற்கான சான்றிதழும் பெற்றுள்ளார். இதுகுறித்து சில புகைப்படங்களை வெளியிட்டுள்ள அவர், “2017ல் இருந்து டைவிங் பழகி வருகிறேன். 2019லேயே ஆழ்கடல் டைவிங்கில் முதல் சான்றிதழை பெற்று விட்டேன். தற்போது அதன் இரண்டாம் நிலையில் வெற்றி பெற்றுள்ளேன். பகலிலும் சரி இரவிலும் சரி கடலில் 100 அடி ஆழத்திற்கு மேல் செல்லும்போது ஏற்படும் அந்த அனுபவத்தை விவரிக்க வார்த்தைகள் இல்லை. பின்னாளில் நான் வயதாகும்போது சொல்வதற்கு எனக்காக நிறைய கதைகள் சேர்த்து வைத்துள்ளேன்” என்று கூறியுள்ளார் சம்யுதா ஹெக்டே.