பெரிய பட்ஜெட்டில் 3டி அனிமேஷனில் தயாராகும் பெருமாளின் அவதாரங்கள் | வெப் தொடரில் நாயகன் ஆன சரவணன் | 'ஜென்ம நட்சத்திரம்' படத்தில் அதிர்ச்சி அளிக்கும் கிளைமாக்ஸ் | 3 மொழிகளில் தயாராகும் 'ஏழுமலை' | 'ஜானகி' பெயரை மாற்ற தயாரிப்பாளர் ஒப்புதல் | பிளாஷ்பேக்: பொன்விழா ஆண்டில் மது அம்பாட் | பிளாஷ்பேக்: சினிமாவில் ஹீரோவான பிறகும் நாடகத்தில் நடித்த எம்ஜிஆர் | 'ப்ரீடம்' வெளியீடு தள்ளி வைப்பு : நாளை ரிலீஸ் ? | தனுஷ் 54 படப்பிடிப்பு, பூஜையுடன் ஆரம்பம் | 5 மொழிகளில் வெளியாகும் நரசிம்மர் படம் |
வடிவேலு நடித்த நாய்சேகர் ரிட்டர்ன்ஸ் படம் சமீபத்தில் வெளிவந்தது. இந்த படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. சமூக வலைத்தளங்களில் படம் ட்ரோல் செய்யப்பட்டது. இந்த நிலையில் திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு வந்த வடிவேலு சாமி தரிசனத்திற்கு பிறகு பத்திரிகையாளர்களிடம் கூறியதாவது:
செந்தில் வேல்முருகனை தரிசிக்க வந்தது மனதுக்கு ஆறுதலாக இருக்கிறது. மனதில் கஷ்டம் இருந்தால் திருச்செந்தூர் முருகனை வணங்கும்போது, உங்க கஷ்டமெல்லாம் தீரும். உங்க குறையெல்லாம் தீரும். எல்லா வளமும் பெற்று நல்லா இருப்போம். 'நாய் சேகர் ரிட்டன்ஸ்' படம் மிகவும் நன்றாக வந்துள்ளது. மக்கள் அதைப்பார்த்து குலுங்கி குலுங்கி சிரிக்கிறார்கள். குடும்பத்துடன் பார்க்க வேண்டிய படம்.
படம் பார்த்தவர்கள் என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து சொல்கிறார்கள். பெரிய வெற்றிப்படமாகியிருப்பதால் தயாரிப்பாளர்கள் சந்தோஷமாக உள்ளனர். அடுத்து நான் நடிக்கும் மாரி செல்வராஜ் இயக்கியுள்ள மாமன்னன் நல்ல கதை உள்ள படம். இது மக்களுக்கு பிடித்த படமாக அமையும். சந்திரமுகி 2 படத்திலும் நடிக்கிறேன். நான் மீண்டும் திரைக்கு வந்ததை ரசிகர்கள் சந்தோஷமா ரசிக்கிறாங்க. இது கடவுளுடைய ஆசீர்வாதம். என்றார்.