பிளாஷ்பேக்: எம்.ஜி.ஆரின் 'இதயக்கனி'க்கு இன்று பொன்விழா | பேண்டஸி படமாக 'விஸ்வம்பரா' | தமிழ் படத்தில் இங்கிலாந்து நடிகை | நடிகை பாலியல் குற்றச்சாட்டு : கேரள இளைஞர் காங்கிரஸ் பதவியை ராஜினாமா செய்த எம்.எல்.ஏ | பிளாஷ்பேக் : அவமானங்களை வெகுமானமாக்கி வென்ற சிரஞ்சீவி | ரஜினிகாந்த் 50 : விழா நடத்துமா தமிழ்த் திரையுலகம்? | தள்ளிப் போகிறது 'டுயூட்' | மீண்டும் விஷால், அஞ்சலி கூட்டணி | சிம்பு கையால் பட பெட்டிகளில் ரூ 500 : டி.ஆர் சொன்ன புது தகவல் | கமல்ஹாசன் தயாரிப்பில் பிரபுதேவா |
ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் பிரம்மாண்டமான ஹாலிவுட் திரைப்படமான 'அவதார் - த வே ஆப் வாட்டர்' படம் டிசம்பர் 16ம் தேதி இந்தியாவில் ஆறு மொழிகளில் வெளியானது. தற்போது இரண்டாவது வாரத்தில் வெற்றிகரமான எடுத்து வைத்துள்ள இந்தப் படம் கடந்த ஒன்பது நாட்களில் இந்தியாவில் 200 கோடி ரூபாய் வசூலைக் கடந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
முதல் வார இறுதியில் சுமார் 40 கோடி வசூலைக் கடந்த இந்தப் படம் கடந்த வார நாட்களில் குறைவான வசூலையே பெற்றது. தற்போது கிறிஸ்துமஸ் விடுமுறை ஆரம்பமாகிவிட்டதால் கடந்த இரண்டு நாட்களாக படத்தின் வசூல் எதிர்பார்த்ததை விடவும் அதிகமாகிவிட்டதாம். இந்த இரண்டு நாட்களில் மட்டும் 25 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது என்கிறார்கள். தற்போது 200 கோடி வசூலைக் கடந்துள்ள இந்தப் படம் இந்த விடுமுறை நாட்களில் இன்னும் வசூலித்து 250 கோடி வசூலைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உலக அளவில் 650 மில்லியன் யுஎஸ் டாலர் வசூலை 'அவதார் 2 இதுவரையில் பெற்றுள்ளது. அதில் அமெரிக்க வசூல் 200 மில்லியன், மற்ற நாடுகளில் 400 கோடி வசூல் என்கிறார்கள். 650 மில்லியன் யுஎஸ் டாலர் என்பது இந்திய ரூபாய் மதிப்பில் 5369 கோடி ரூபாய் ஆகும். சுமார் 400 கோடி யுஎஸ் டாலர் மதிப்பில், அதாவது 3300 கோடி ரூபாய் பட்ஜெட்டில் 'அவதார் 2' தயாரிக்கப்பட்டுள்ளது.