பரபரப்பில்லாமல் இன்றைய வெளியீடுகள் | ஆறு மாதங்கள் தள்ளிப் போனது 'இட்லி கடை' | கார் பார்க்கிங் பிரச்னை : பிக்பாஸ் பிரபலம் தர்ஷன் கைது | இந்தியன் 3 படத்தின் பணிகள் மீண்டும் துவங்கியது | இறுதி கட்டத்தில் 'லவ் மேரேஜ்' | பிளாஷ்பேக் : இந்தியன் பனோரமாவில் திரையிடப்பட்ட முதல் தமிழ்படம் | பிளாஷ்பேக் : லலிதா, பத்மினிக்காக காத்திருந்த ரசிகர்கள் | ஆஸ்கர் விருது வரை சென்ற 'லபாட்டா லேடீஸ்' படம் கதை காப்பி சர்ச்சையில் சிக்கியது | சினிமா ஆனது இந்தியாவின் முதல் மகாத்மாவின் வாழ்க்கை | 'பயர்' 50வது நாள் : சவாலான படங்களை தயாரித்து, இயக்க ஜே சதீஷ் குமார் முடிவு |
மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் படத்தில் நடித்த பிறகு திரிஷாவின் மார்க்கெட் மீண்டும் சூடு பிடித்திருக்கிறது. ஏற்கனவே அவர் நடித்து முடித்து கிடப்பில் கிடந்த ராங்கி படம் தற்போது ரிலீசுக்கு தயாராகி விட்டது.. அதேபோன்று தி ரோடு என்ற ஒரு படத்தில் ஆக்சன் ஹீரோயினாக நடித்து வருகிறார் திரிஷா. இதை அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் 67-வது படத்திலும், விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித் நடிக்கும் 62 வது படத்திலும் திரிஷா நடிப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதனால் கோலிவுட்டில் மீண்டும் பரபரப்பு வளையத்திற்குள் வந்திருக்கிறார் திரிஷா. இதற்கு முன்பு விஜய்யுடன் கில்லி, திருப்பாச்சி, ஆதி, குருவி போன்ற படங்களில் நடித்துள்ள திரிஷா, அஜித்துடன் ஜி, கிரீடம், மங்காத்தா, என்னை அறிந்தால் போன்ற படங்களில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.