20 ஆண்டுகளுக்கு பின் தென்னிந்திய படத்தில் சஞ்சீதா ஷேக் ரீஎன்ட்ரி | மீண்டும் இணையும் ‛மை லார்ட்' கூட்டணி | புருஷன் படப்பிடிப்பு துவங்கியது | உதய்ப்பூர் புகைப்படங்களை தனித்தனியே பகிரும் விஜய் தேவரகொண்டா ராஷ்மிகா | புது முகங்களின் 'ஹைக்கூ ' | 'காந்தாரா' வழக்கு ரத்து செய்ய ரன்வீர் சிங் மனு | சென்னையில் மீண்டும் சிம்பொனி இசை நிகழ்ச்சி நடத்தும் இளையராஜா | 'கல்கி 2' படப்பிடிப்பு அப்டேட் தந்த அமிதாப் பச்சன் | பிளாஷ்பேக் : டப்பிங் கலைஞர் பாரதிராஜா | பிளாஷ்பேக் : தமிழ் படத்தை தணிக்கை செய்த ஜவஹர்லால் நேரு |

கடந்த ஒன்பது வருடங்களுக்கு முன்பு இயக்குனர் மணிரத்னத்தின் கடல் படத்தில் கதாநாயகனாக அறிமுகப்படுத்தப்பட்டவர் நடிகர் கார்த்திக்கின் மகன் கவுதம் கார்த்திக். அப்போதிலிருந்து இப்போது வரை தனி ஹீரோவாகவே பல படங்களில் நடித்துள்ளார் கவுதம் கார்த்திக். இருந்தாலும் அவருக்கென சொல்லிக் கொள்ளும்படியான வெற்றி கிடைக்கவில்லை. இந்த நிலையில் முதன்முறையாக சிம்புவுடன் இணைந்து பத்து தல என்கிற படத்தில் நடித்துள்ளார் கவுதம் கார்த்திக்.
இந்த படத்தை கிருஷ்ணா என்பவர் இயக்கியுள்ளார். இந்த படம் கேங்க்ஸ்டர் பாணியில் உருவாகி உள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விட்ட நிலையில் கடந்த சில நாட்களாக கவுதம் கார்த்திக் இந்த படத்தில் தனக்கான டப்பிங்கை பேசி வந்தார். தற்போது டப்பிங் பணிகள் முடிவடைந்துவிட்டன. இந்த படம் வரும் மார்ச் மாதம் வெளியாகும் என சொல்லப்படுகிறது.