இந்த முட்டாள் யார் : ஸ்ரேயா கோபம் | பெண் குழந்தைக்கு அப்பாவான பிரேம்ஜி அமரன் | டிச., 8ல் துவங்கும் சூர்யா 47 பட படப்பிடிப்பு | தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கடும் போட்டி | ஏகனுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் | நலமாக இருந்தால்தான் நல்லதைத் தர முடியும்: தீபிகா படுகோனே | ஒரு வாரம் தள்ளிப்போகும் ‛வா வாத்தியார்' | தனுஷ், அவரது மேலாளர் பற்றிய சர்ச்சை : முற்றுப்புள்ளி வைத்த மான்யா ஆனந்த் | 9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? |

பிரபல டிரம்ஸ் இசை கலைஞர் சிவமணி. உலகம் முழுக்க இசை கச்சேரிகளை நடத்தி வருகிறார். ஏ.ஆர்.ரகுமான் உள்ளிட்ட முன்னணி இசை அமைப்பாளர்களுடன் திரைப்படங்களில் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் அவர் இசை அமைப்பாளராக அறிமுகமாகிறார்.
விவேக் கே.கண்ணன் இயக்கத்தில் சன்னி லியோன், ப்ரியாமணி, ஜாக்கி ஷெராப் மற்றும் சாரா நடிக்கும் 'கொட்டேஷன் கேங்' என்ற படத்திற்கு இசை அமைக்கிறார். இந்த படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய 5 மொழிகளில் உருவாகிறது. படப்பிடிப்பு மும்பையில் நிறைவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் மும்பை மற்றும் சென்னையில் நடைபெற்று வருகிறது. க்ரைம் திரில்லர் பாணியில் உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு காஷ்மீர், சென்னை, ஹைதராபாத் மற்றும் மும்பை ஆகிய இடங்களில் படமாக்கப்பட்டுள்ளது.