ஆறு வருடமாக பாலியல் டார்ச்சர் செய்த துணை நடிகை மீது போலீஸில் நடிகர் புகார் | பிடிவாதமாக பெட்ரோலை குடித்த அஜித்; திருப்பதியில் அஜித் எடுத்த ரிஸ்க் | பிளாஷ்பேக்: முதல் ஒளி வடிவம் பெற்ற ஜெயகாந்தனின் “உன்னைப் போல் ஒருவன்” | ஹிந்தி பட புரமோஷனில் காதலுக்கு விளக்கம் கொடுத்த தனுஷ் | ‛நூறு சாமி'க்காக காத்திருக்கும் ‛லாயர்' | மனைவிக்கு ‛தடா' போட்ட சார்பட்டா நடிகர் | நடிகருக்காக சீன்களை சுடும் இயக்குனர்கள் | லாவண்யாவின் ஸ்(வரம்) | குழந்தை நட்சத்திரத்தில் இருந்து நாயகி வரை: தன்னம்பிக்கையோடு தனலெட்சுமி | ‛காந்தாரா' கண்டெடுத்த அய்ரா |

சென்னையைச் சேர்ந்த, 'டேக் என்டர்டெயின்மென்ட்' நிறுவனம் தாக்கல் செய்த மனு: நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த ஹீரோ படத் தயாரிப்புக்காக, கே.ஜே.ஆர்.ஸ்டுடியோ மற்றும் 24 ஏ.எம்.ஸ்டுடியோஸ் நிறுவனம், 5 கோடி ரூபாய் கடனாக, எங்கள் நிறுவனத்திடம் பெற்றது. கடனை திருப்பி செலுத்தாததால், வட்டியுடன் 6.92 கோடி ரூபாய் தர உத்தரவிடக் கோரி, வழக்கு தொடரப்பட்டது.
அதை விசாரித்த உயர் நீதிமன்றம், சென்னை மற்றும் செங்கல்பட்டில் உள்ள தியேட்டர்களில், ஹீரோ படத்துக்கு வசூலாகும் தொகையை, நீதிமன்றத்தில் செலுத்தும்படி உத்தரவிட்டது. பணம் கொடுக்க வேண்டிய பொறுப்பு, சிவகார்த்திகேயனுக்கும் உள்ளது. அவரையும் சேர்த்து தான், நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதுவரை, ஹீரோ படத்தின் வாயிலாக வசூலான தொகையை செலுத்த, சிவகார்த்திகேயன் எந்த முயற்சியும் எடுக்கவில்லை. பிரின்ஸ் படத்துக்காக, 30 கோடி ரூபாய் சம்பளம், அவருக்கு கிடைக்கிறது. அந்த சம்பளத் தொகையை முடக்கி வைத்தால் தான், எங்களுக்கு வர வேண்டிய பணம் கிடைக்கும். எனவே, சிவகார்த்திகேயனுக்கு தர வேண்டிய சம்பளத்தை, நீதிமன்றத்தில் செலுத்தும்படி, அப்படத்தின் தயாரிப்பாளருக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
மனு, நீதிபதி சரவணன் முன், விசாரணைக்கு வந்தது. பிரின்ஸ் படத்தில் பெற்ற சம்பளத்தை, இவ்வழக்கில் கோரப்பட்ட தொகைக்காக செலுத்த, நடிகர் சிவகார்த்திகேயனுக்கு உத்தரவிடும்படி, மனுதாரர் தரப்பில் கூறப்பட்டது. சிவகார்த்திகேயன் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் விஜயன் சுப்ரமணியன், 'நடிகர் என்ற முறையில், சம்பளம் பெற்று நடிக்கிறார். தயாரிப்பு பணிகளுக்கும், அவருக்கும் சம்பந்தமில்லை; துன்புறுத்தும் வகையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது' என்றார்.
இரு தரப்பு வாதங்களுக்கு பின், நடிகரின் சம்பளத்தை செலுத்தக் கோரிய மனுவை, நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.