''அப்பா ஒரு குழந்தை; ஆதாரமற்ற வதந்திகளை பரப்பாதீர்கள்'' - ஏ.ஆர்.ரஹ்மான் மகன் வேதனை | அழகுக்காக ஸ்ரீதேவி பட்ட சிரமம் : போனி கபூர் தகவல் | 'வேவ்ஸ்' ஓ.டி.டி., தளம் : பிரசார் பாரதி துவக்கம் | நவ.26ம் தேதியில் விடுதலை-2 படத்தின் இசை வெளியீட்டு விழா | தெலுங்கில் அறிமுகமாகும் மமிதா பைஜூ | திருமணத்திற்கு தயாராகும் தமன்னா | திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த சந்தானம் | நடிகை சீதா வீட்டில் நகை திருட்டு : போலீசில் புகார் | சமந்தா சொல்வது உண்மைதான் : அர்ஜுன் கபூர் ஒப்புதல் | சர்ச்சைகளை நீர்த்துப்போக செய்யும் விதமாக தயாராகிறதா மோகன்லால் - மம்முட்டி படம்? |
விஷால் நடித்துள்ள லத்தி படம் நாளை (டிச.,22) தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் வெளியாகிறது. படத்திற்காக கடந்த ஒரு வாரமாக பல ஊர்களுக்கு சென்று புரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். இதன் ஒரு பகுதியாக நேற்று திருப்பதி சென்ற விஷால் அங்குள்ள கல்லூரி ஒன்றில் மாணவர்களுடன் கலந்துரையாடினார். அப்போது மாணவர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். அந்த கேள்வி பதில் பகுதியின் சில...
கேள்வி: உங்களை கவர்ந்த அரசியல் தலைவர் யார்?
பதில்: ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி
கேள்வி: வருகிற தேர்தலில் குப்பம் தொகுதியில் போட்டியிடுவீர்களா?
பதில்: குப்பம் பகுதியில் எங்கள் குடும்பத்தின் கிரானைட் குவாரி உள்ளது. அந்த பகுதியை நான் நன்கு அறிவேன். அதற்காக குப்பம் தொகுதியில் போட்டியிட வேண்டும் என நினைத்தது இல்லை. அரசியலுக்கு வந்துதான் ஒருவர் சேவை செய்ய வேண்டும் என்பது இல்லை. நான் தற்போது சினிமாவில் நடிப்பதையே மகிழ்ச்சியாக எடுத்துக் கொள்கிறேன்.
கேள்வி: உங்களுக்கு எம்.எல்.ஏ ஆகும் ஆசை இல்லையா?
பதில்: ஒரு எம்.எல்.ஏ எவ்வளவு சம்பாதிக்கிறாரோ அதைவிட எனது படங்கள் மூலம் நான் அதிகம் சம்பாதிக்கிறேன். ஒரு எம்.எல்.ஏ.,வுக்கு இருக்கும் புகழை விட எனக்கு அதிக புகழ் இருக்கிறது.
கேள்வி: நீங்கள் அரசியல்வாதியா, இல்லையா?
பதில்: சமூக சேவை செய்கிற எல்லோருமே அரசியல்வாதிகள்தான். கட்சியில் சேர்ந்து தேர்தலில் போட்டியிடுகிறவர்கள் மட்டும் அரசியல்வாதிகள் அல்ல.
கேள்வி: வருங்காலத்தில் அரசியலில் குதித்தால் எந்த மாநில அரசியலில் குதிப்பீர்கள்?
பதில்: கண்டிப்பாக ஆந்திர அரசியலுக்கு வரமாட்டேன்.