'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
அர்ஜென்டினா- பிரான்ஸ் அணிகளுக்கு இடையிலான உலக கோப்பை கால்பந்து போட்டியின் இறுதி போட்டியில் அர்ஜென்டினா அணி வெற்றி பெற்றது. அந்த அணியைச் சேர்ந்த மெஸ்சிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. இந்த நிலையில் இயக்குனர் மிஷ்கின் அது குறித்து தனது சோசியல் மீடியாவில் ஒரு பதிவு போட்டு இருக்கிறார். அந்த பதிவில், ‛‛சிறு பிராயத்தில் நான் விளையாடிய கால்பந்தாட்டத்தை மறந்து இன்று மீண்டும் மெஸ்சியின் மூலமாக புதிதாக புரிந்து கொண்டேன். மெஸ்சி அர்ஜென்டைனாவுக்கு மட்டுமல்ல இந்த பிரபஞ்சத்திற்கே சொந்தமானவர். பந்திற்கும் அவரின் காலுக்கும் இடையே பெரும் புவியீர்ப்பு விசை இயங்குகிறது. ஷன நேரத்தில் நூறு முடிவுகளை அந்த மனிதரின் அசாத்திய மூளை எடுக்கிறது. மெஸ்சியின் ஒவ்வொரு அசைவிலும் இசை பிறக்கிறது. புருஸ்லீ, மைக்கேல் ஜாக்சன் போல மெஸ்சியும் நம் மனதுகளில் விளையாடுகிறார். வான்காவை போல் நெருடாவை போல, பீத்தோவனை போல் மெஸ்சியும் ஒரு மகா கலைஞன். அன்பு மெஸ்சியே, உன் கால்களை நான் முத்தமிடுகிறேன் - மிஷ்கின்'' என்று அவர் பதிவிட்டு இருக்கிறார்.