துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? | 5 ஆண்டுகளை நிறைவு செய்த தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் | மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ |
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான அஜித்துக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். எப்பொழுதும் தான் உண்டு தன் வேலை உண்டு என்று தனது வேலையை மட்டுமே பார்த்துக் கொண்டிருக்கும் அஜித், எந்தவொரு வம்பு தும்புகளிலும் சிக்காமல் அவரது வேலையில் கவனம் செலுத்தி வருவார். மேலும் பல வருடங்களுக்கு முன்பு தனது ரசிகர் மன்றங்களை முழுவதும் கலைத்தார் .
இந்நிலையில் நடிகர் அஜித்குமார் ரசிகர் மன்றம் மூலமாக, வீடு கட்டி தருவதாக கூறி ரூ.1.10 லட்சம் மோசடி சம்பவம் நடந்துள்ளது . சிவா என்பவர் மீது நெல்லை விக்ரமசிங்கபுரம் பகுதியைச் சேர்ந்த ராஜேஸ்வரி என்ற பெண் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார் . தற்போது காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.