நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

கேஜிஎப்- 2 படத்தில் நடித்து தென்னிந்திய சினிமாவில் அறிமுகமானார் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத். அந்த முதல் படமே அவருக்கு மெகா ஹிட் படமாக அமைந்தது. அதையடுத்து விஜய் நடிக்கும் 67வது படத்தின் மூலம் தமிழில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தை அடுத்து தெலுங்கில் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படத்தில் கமிட்டாகி இருப்பவர், அதையடுத்து மாருதி இயக்கத்தில் பிரபாஸ் நடிக்கும் புதிய படத்திலும் கமிட்டாகி இருக்கிறார் சஞ்சய் தத்.
இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது. இதில் சஞ்சய் தத் வில்லன் அல்லாமல் ஒரு மாறுபட்ட கேரக்டரில் நடிக்கிறார். தற்போது ஆதிபுருஸ், சலார் படங்களைத் தொடர்ந்து நாக் அஸ்வின் இயக்கும் ப்ராஜெக்ட் கே என்ற படத்தில் நடித்து வருகிறார் பிரபாஸ். இப்படத்தில் அவருடன் அமிதாப்பச்சன், தீபிகா படுகோனே, திஷா பதானி ஆகியோர் நடித்து வருகிறார்கள். இந்த படத்தை முடித்ததும் மாருதி இயக்கும் படத்தில் நடிக்கப் போகிறார்.