அஸ்வத் மாரிமுத்துவிற்கு விண்ணப்பித்த 15 ஆயிரம் உதவி இயக்குனர்கள்! | கவுதம் ராம் கார்த்திக் 19வது படத்தின் படப்பிடிப்பு துவங்கியது! | ''இப்போ ரிஸ்க் எடுக்கலைனா.. எப்பவும் இல்ல'': சினிமா என்ட்ரி குறித்து மனம்திறந்த காவ்யா அறிவுமணி | த்ரிவிக்ரம் இயக்கத்தில் தனுஷ்? | குட் பேட் அக்லி - முன்பதிவு நிலவரம் என்ன? | அஜித், தனுஷ் கூட்டணி அடுத்த கட்டத்திற்கு நகர்கிறது! | 'ரெட்ட தல' படத்தின் புதிய அப்டேட்! | ராஜமவுலியுடன் இணையாதது ஏன்? சிரஞ்சீவி விளக்கம் | சென்னையை விட்டு சென்றது ஏன்? சசிகுமார் விளக்கம் | தமிழிலும் வெளியாகும் 'இத்திக்கர கொம்பன்' |
பிரின்ஸ் படத்திற்கு பிறகு தற்போது மடோன் அஸ்வின் இயக்கும் மாவீரன் என்ற படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக அதிதி ஷங்கரும், வில்லனாக இயக்குனர் மிஷ்கினும் நடிக்கிறார்கள். இதற்கிடையே கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பே ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள அயலான் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதி கட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது. இப்படத்தில் கிராபிக்ஸ் காட்சிகள் அதிகமாக இருப்பதால் காலதாமதம் ஆகி வருவதாக இயக்குனர் ரவிக்குமார் ஏற்கனவே தெரிவித்திருந்தார். இந்த நிலையில் தற்போது ஹாலிவுட்டில் வெளியான அவதார் படத்தில் பணியாற்றிய சில கிராபிக்ஸ் கலைஞர்கள் இந்த அயலான் படத்தில் பணியாற்றி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதோடு அயலான் படம் அடுத்த ஆண்டு எப்படியும் திரைக்கு வந்துவிடும் என்றும் கூறப்படுகிறது.