தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
ராஜமவுலி இயக்கத்தில் ராம்சரண், ஜூனியர் என்டிஆர் நடிப்பில் வெளியான ஆர்ஆர்ஆர் படம் உலகம் முழுவதும் ஆயிரம் கோடிக்கு மேல் வசூல் செய்தது. இப்படம் 2022 ஆம் ஆண்டின் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் படமாகும். அதையடுத்து கன்னட படமான கேஜிஎப்-2 வசூல் ரீதியாக இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது. இந்த நிலையில் புக்மைஷோ என்ற டிக்கெட் செயலியில் ஆர்ஆர்ஆர் படத்தைவிட கேஜிஎப் 2 படத்திற்கு அதிகப்படியான டிக்கெட்டுகள் விற்பனையாகி உள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன்படி முதலிடத்தில் கேஜிஎப் 2, இரண்டாம் இடத்தில் ஆர்ஆர்ஆர், மூன்றாம் இடத்தில் விக்ரம், நான்காம் இடத்தில் பொன்னியின் செல்வன், ஐந்தாம் இடத்தில் பிரமாஸ்திரா படங்கள் அதிக டிக்கெட்டுகள் விற்கப்பட்டு அடுத்தடுத்த இடங்களை பிடித்தன.