'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
தமிழ், மலையாளம் உட்பட பல மொழிகளில் பின்னணி பாடி வருபவர் கே.எஸ் .சித்ரா. விஜய சங்கர் என்பவரை திருமணம் செய்து கொண்ட சித்ராவுக்கு நந்தனா என்ற ஒரு மகள் இருந்தார். கடந்த 2011ம் ஆண்டு ஒரு இசை நிகழ்ச்சிக்காக துபாய் நாட்டுக்கு சென்று இருந்த போது அங்குள்ள நீச்சல் குளம் ஒன்றில் தவறி விழுந்து நந்தனா இறந்து விட்டார்.
இந்நிலையில் டிசம்பர் 18ம் தேதியான இன்று மகளின் பிறந்த நாள் என்பதால் தனது சோசியல் மீடியாவில் ஒரு நெகிழ்ச்சியான பதிவு போட்டிருக்கிறார் பாடகி சித்ரா. அந்த பதிவில், சொர்க்கத்தில் தேவதைகளுடன் பிறந்தநாள் கொண்டாடும் உனக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துக்கள். எல்லா இடத்திலும் அன்பு செலுத்தும் உனக்கு வயது அதிகம் ஆகாது. நீ பாதுகாப்பாக இருக்கிறாய் என்று எனக்கு தெரியும். உன்னை மிகவும் மிஸ் பண்ணுகிறேன் என்று அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.