'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
'ரெளத்திரம்', 'இதற்குத்தானேஆசைப்பட்டாய் பாலகுமாரா','காஷ்மோரா', 'ஜுங்கா', 'அன்பிற்கினியாள்' ஆகிய படங்களை இயக்கியவர் கோகுல். இவர் தற்போது ஆர்.ஜே. பாலாஜி நடிக்கும் புதிய திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்தபடத்தில் சத்யராஜ், லால்,தலைவாசல் விஜய் உட்பட பலர் நடிக்கின்றனர். ஐசரி கே கணேஷின் வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் தயாரிக்கிறது.
இந்த படத்திற்கு ‛சிங்கப்பூர் சலூன்' என தலைப்பிட்டுள்ளனர். இதற்கான படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தன. ஒரு முடி திருத்துபவரின் வாழ்க்கையை மையமாக கொண்டு உருவாகியுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. கோடை விடுமுறைக்கு படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர்.