சீதா மாதாவின் ஆசீர்வாதம் : சாய் பல்லவி மகிழ்ச்சி | பாலிவுட்டில் தென்னிந்திய நடிகர்களுக்கு மரியாதை இல்லையா : பிரியாமணி பதில் | 'பாபநாசம்' படத்தில் என் முதல் சாய்ஸ் ரஜினிதான்: ஜீத்து ஜோசப் பகிர்ந்த சுவாரஸ்ய தகவல் | தனுஷூக்கு ஜோடியாகும் பூஜா ஹெக்டே! | அஜித் பட ஹீரோயின் யார் | சினிமாவில் நடப்பதை மட்டும் பூதக் கண்ணாடி வச்சு பாக்காதீங்க : குஷ்பு காட்டம் | பழனி முருகன் கோவிலில் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்த விக்னேஷ் சிவன் - நயன்தாரா | அர்ஜுன் தாஸ் குரலைப் பாராட்டிய பவன் கல்யாண் | சுதீப் 47 படத்தை இயக்கப் போகும் 'மேக்ஸ்' இயக்குனர் | புதிய சாதனை படைத்த 'ஹரிஹர வீரமல்லு' டிரைலர் |
தமிழ் சினிமாவில் குறுகிய காலத்திற்குள்ளாகவே வெறும் நான்கு படங்களை மட்டுமே இயக்கி முன்னணி நடிகர்கள் பட்டியலில் இடம்பிடித்து விட்டார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். அடுத்தடுத்து விஜய், கார்த்தி, கமல் என தொடர்ந்து முன்னணி நடிகர்களை வைத்து படம் இயக்க உள்ள லோகேஷ் கனகராஜ், இந்த வருடம் சமூக வலைதளத்தில் இளம் ரசிகர்களால் அதிகம் பாராட்டப்பட்டவர். குறிப்பாக இவரது விக்ரம் படம் அனைத்து தரப்பினரிடமும் பாராட்டுகளைப் பெற்றது. அதேசமயம் இந்த வருடத்தில் வெளியான படங்களில் தன்னை கவர்ந்த படம் என, மலையாளத்தில் டொவினோ தாமஸ், கல்யாணி பிரியதர்ஷன் நடிப்பில் வெளியான ‛தள்ளுமால' என்கிற படத்தை பாராட்டியுள்ளார் லோகேஷ் கனகராஜ்.
இதுபற்றி பற்றி சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ள லோகேஷ் கனகராஜ், “தள்ளுமால படம் இந்த 2022ல் என்னை கவர்ந்த சிறந்த படம் என்பேன். கிட்டத்தட்ட நான்கு தடவை இந்த படத்தை நான் பார்த்துவிட்டேன்” என்று பாராட்டியுள்ளார். காலித் ரகுமான் என்பவர் இயக்கியுள்ள இந்தப் படம், எதற்கெடுத்தாலும் அடிதடியில் இறங்கும் இரண்டு இளைஞர்கள் குரூப்பை மையப்படுத்தி உருவாகி இருந்தது. படத்தில் பல சண்டை காட்சிகள் இடம் பெற்றிருந்தாலும், காமெடி கலந்த ஆக்ஷன் படமாக உருவாகி இருந்த இந்த தள்ளுமால திரைப்படம் வெற்றிபாடமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.