இளம் நடிகருடன் காதலா? - கோட் நடிகை விளக்கம் | ஏஆர் ரஹ்மான் பிரிவுக்கும், மோகினி டே பிரிவுக்கும் சம்பந்தம் இல்லை: சாய்ரா பானு வழக்கறிஞர் விளக்கம் | என் மகளை மீட்டு தந்தது செட்டிக்குளங்கரா தேவி தான் : நயன்தாரா அம்மா உருக்கம் | மலையாள வாரிசு வில்லன் நடிகர் மேகநாதன் மறைவு | கிஸ் படத்திலிருந்து அனிரூத் விலகலா? | சம்பந்தி இது சரியில்லை : ‛ராஜாகிளி' பட விழாவில் அர்ஜூன் கலாட்டா | ராம் பொதினேனிக்கு ஜோடியான பாக்யஸ்ரீ போர்ஸ் | சிவகார்த்திகேயனுக்கு வில்லனா? மறுப்பு தெரிவித்த விஷால் | ஹாலிவுட் மியூசிக் மீடியா விருது: ஆடுஜீவிதம் பின்னணி இசைக்காக வென்றார் ஏ.ஆர்.ரஹ்மான் | விஜய் 69வது படத்தில் இணையும் வரலட்சுமி |
ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் இந்த ஆண்டின் அதிக எதிர்பார்ப்பை எற்படுத்திய படமாக இருந்த அவதார் படத்தின் இரண்டாம் பாகமான 'அவதார் - த வே ஆப் வாட்டர்' படம் நேற்று உலக அளவில் வெளியானது. முழுக்க முழுக்க விஷுவல் டிரீட் மட்டுமே படத்தில் உள்ளது என்பதையும் தாண்டி ‛அவதார்' படம் இந்திய கலாச்சாரத்தோடும், சனாதன தர்மத்தையும் எடுத்துக்காட்டுகிறது என்ற கருத்து பகிரப்பட்டு வருகிறது.
உலகம் முழுவதும் சனாதன தர்மத்தின் தத்துவங்களை தழுவி எடுக்கப்படும் படங்கள் மிகப்பெரும் வெற்றியை பெறுகின்றன. 'மேட்ரிக்ஸ்', 'பாகுபலி' முதல் 'அவதார்' வரை அதுதான் நடந்தேறி வருகிறது. அந்த வரிசையில் வந்துள்ள மற்றொரு படம்தான் அவதார் இரண்டாம் பாகம்.
பஞ்ச பூத தத்துவங்களில் நீரை அடிப்படையாக கொண்டு இந்த படம் செல்கிறது. நீர் நமக்குள்ளும் இருக்கின்றது நமக்கு வெளியேயும் இருக்கின்றது எனும் உபநிடத வார்த்தைகளை அது வெளிப்படுத்துகிறது. படத்தில் உள்ள அடுத்த தலைமுறை 'அனிமேஷன்', 'வி.எப்.எக்ஸ்' எல்லாவற்றையும் விட படம் சொல்ல வரும் செய்தி மிக முக்கியம். படத்தின் திரைக்கதை வசனங்களை கவனித்து படம் பார்க்கப்பட வேண்டும்.
படத்தின் கதை ஒருவகையில் ராமாயணத்தை நினைவு படுத்துகிறது. ராமாயணத்தில் நாட்டை விட்டு காட்டிற்கு செல்வது போல் இங்கே காட்டை விட்டு நீர் உலகுக்கு குடும்பத்தோடு செல்கிறான் கதாநாயகன். ராமாயணம் போலவே மக்கள் துயரத்தோடு வழி அனுப்பி வைக்கிறார்கள். ராமாயணத்தில் ராமர், வானரங்கள், பறவைகள், கரடிகள், அணில்கள் என பலவகையான உயிரினங்களின் உதவியோடு தீமையை எதிர்த்து வெல்வது போல் மிருகங்கள் துணையோடு தீமையை வெல்கிறான் கதாநாயகன்.
மேற்கத்திய கலாச்சாரமும், மேற்கத்திய மத ரீதியான நம்பிக்கைகளும் மனிதனை இயற்கையை விட்டு தனிமை படுத்துகிறது. சனாதன தர்மமோ அனைத்து உயிரினங்களும், இயற்கையும், ஒன்றோடு ஒன்று பிண்ணி பிணைந்தவை, ஒன்று மற்றதை சார்ந்து இருப்பவை என போதிக்கிறது. அவதார் படம் அப்படி ஒரு பிணைப்பைத்தான் வலியுறுத்துகிறது. செயற்கையோடு ஒன்றி, தன்னை தனியாக பிரித்து பார்க்கும் மனிதனின் ஆணவம், அறிவுச்செருக்கு, அனைத்தையும் ஆட் கொள்ள நினைக்கும் அரக்க குணம், ஆகியவை ஒரு போதும் இயற்கைக்கு எதிராக வெற்றி பெறாது, தர்மமே இறுதியில் வெல்லும் என்பதை திரைப்படம் உணர்த்துகிறது.
அவதார் இரண்டாம் பாகத்தை பொறுத்தவரை அது குடும்ப பிணைப்பை, பாரதத்தின் கலாச்சார அங்கமான குடும்பத்தின் வலிமையை உணர்த்துகிறது. ஆனால் குடும்பத்தை விட சமூகமும், நாடும் முக்கியம் எனும் கருத்தை அது என் வலியுறுத்தவில்லை எனும் கேள்வி மிஞ்சுகிறது. ஒரு கதாநாயகன் என்பவன் குடும்ப நன்மையை கடந்து தனக்கு அடைக்கலம் கொடுத்த இனத்தவரின் நன்மைக்கு தன் குடும்பத்தை தியாகம் செய்ய தயாராக இருக்க வேண்டும் அல்லவா ?
அவதார் முதல் பாகத்தில் நாம் ஏற்கனவே பார்த்து விட்ட பிரமிக்க வைக்கும் காட்சி இதில் வேறொரு பரிணாமத்தில் இடம் பெறுகிறது. என்னதான் பிரமிக்க வைத்தாலும், அது தொடர்ந்து கொண்டே செல்வதால் சற்று தொய்வு தெரிகிறது. படம் வேறு மூன்று மணி நேரம் என்பதால் அந்த தொய்வை நம்மால் தெளிவாக உணர முடிகிறது. அதே வேளையில் அவதார் வரிசையில் வரும் படங்கள் ஜேம்ஸ் கேமரூன் எனும் மகா திரைகலைஞனின் ஒரு சகாப்தம். நீங்கள் உங்கள் வாழ்நாளில் தவறாமல் பார்க்க வேண்டிய படங்களுள் ஒன்று.
மற்றபடி எழுபது வயதில் பன்ச் வசனம் பேசி கொண்டே முப்பது பேரை அடிக்கும் காட்சிகளோ, ஹீரோயிசத்தால் ஐயர் பெண்ணை கவரும் காட்சிகளோ, தேச விரோதம் பேசி கொண்டே தமிழ் அண்டா, குவளை எனும் காட்சிகளோ, கட்டிங் போடுவது, குப்பத்தில் சர்ச் வாசலில் கானா பாடுவது போன்ற காட்சிகளோ எதுவும் இதில் இல்லை. அப்படிப்பட்ட காட்சிகளை நீங்கள் விரும்புவதாக இருந்தால் நிச்சயம் இந்த திரைப்படத்திற்கு செல்லாதீர்கள்.
படம் பார்த்து வெளியே வருகையில் எங்கோ பிரபஞ்சத்தில் பயணித்து, ஏதோ ஒரு மாயை உலகில் வாழ்ந்து, பின் பூமியில் விழுந்தது போல் தோன்றுவதுதான் இந்த படத்தின் பிரமாண்ட வெற்றி.