அர்ஜுன் தாஸ் ஜோடியாக மமிதா பைஜூ? | திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் ரம்யா பாண்டியனுக்கு கிடைத்த பவர் | லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | விஜய் சேதுபதியை இயக்கும் துரை செந்தில்குமார் | படையப்பா... ஜெயிலர் 2... ரம்யா கிருஷ்ணன் பகிர்ந்து சுவாரஸ்யம் | அடுத்த படத்திற்காக கதை கேட்கும் பவிஷ் | வாடிவாசல் படப்பிடிப்பில் ஏற்பட்ட திடீர் மாற்றம் | அல்லு அர்ஜுன், அட்லி படம் : கதாநாயகிகள் வாய்ப்பு யாருக்கு? | ஒரு பாட்டாவது வைத்திருக்கலாம்…. த்ரிஷா, சிம்ரன் ரசிகர்கள் வருத்தம் | 2025ல் இரண்டாவது 50 நாள் படம் 'டிராகன்' |
2022ம் வருடத்தில் ஏறக்குறைய ஒவ்வொரு வாரமும் புதிய படங்கள் வெளியாவது நடந்திருக்கிறது. எப்போதும் கடைசி மாதமான டிசம்பர் மாதத்தில் கூடுதலான படங்கள் வருவது வழக்கம். அந்த விதத்தில் இந்த மாதத்தின் இரண்டாவது வெள்ளிக்கிழமையான நேற்று முன்தினம் டிசம்பர் 9ம் தேதி, டப்பிங் படங்களுடன் சேர்த்து, “DR 56, எஸ்டேட், ஈவில், குருமூர்த்தி, நாய் சேகர் ரிட்டர்ன்ஸ், ஸ்ரீ ராஜ ராஜ மணிகண்டன், வரலாறு முக்கியம், விஜயானந்த்,” என 8 படங்களும் நேற்று டிசம்பர் 10ம் தேதி மறு வெளியீடாக ரஜினிகாந்த் நடித்த 'பாபா' படமும் வெளியாகியது.
மறு வெளியீட்டுப் படமான 'பாபா' படத்திற்காவது சில பல லட்சங்கள் நேற்றைய முதல் நாள் வசூலாகக் கிடைத்ததாக பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. டிசம்பர் 9ம் தேதி வெளிவந்த புதிய படங்கள் அனைத்துமே வசூலில் தள்ளாடி வருவதாகச் சொல்கிறார்கள். படம் வெளியான தினத்தில் 'மாண்டஸ்' புயலின் தாக்கம் காரணமாக பல மாவட்டங்களில் மழை பெய்ததால் மக்கள் தியேட்டர்கள் பக்கம் வரவேயில்லை. நேற்று மட்டும் சில காட்சிகளுக்கு மக்கள் வந்திருக்கிறார்கள்.
இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்றாலும் முன்பதிவுகள் மிகவும் மோசமாகவே உள்ளன. இந்த மழை, குளிரில் எதற்காக வெளியில் செல்ல வேண்டும் என பலரும் வீட்டிற்குள்ளேயே முடங்கிக் கிடக்கிறார்கள். நாளை வெயில் வந்தால் அதன் பிறகுதான் மக்கள் வெளியில் செல்வார்கள் போலிருக்கிறது. எதிர்பார்க்கப்பட்ட சில படங்களும் ஏமாற்றியதால் வரும் வார நாட்களிலும் குறிப்பிட்ட அளவு வசூல் கிடைப்பதும் சந்தேம் என்றே தெரிவிக்கிறார்கள்.