நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

தமிழில் சுப்ரமணியபுரம், கனிமொழி, போராளி, இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா உட்பட பல படங்களில் நடித்தவர் சுவாதி. கடைசியாக திரி என்ற படத்தில் நடித்தவர் கடந்த 2018ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். அதையடுத்து நான்கு ஆண்டுகளாக சினிமாவில் நடிக்காமல் இருந்த சுவாதி தற்போது பஞ்சதந்திரம் என்ற தெலுங்கு படத்தில் ரீஎன்ட்ரி கொடுத்திருப்பவர், மேலும் இரண்டு தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார்.
இதில் ஹர்ஷா புலிபாகா இயக்கத்தில் சுவாதி முக்கிய வேடத்தில் நடித்துள்ள பஞ்சதந்திரம் படத்தில் அவருடன் பிரம்மானந்தம், சமுத்திரக்கனி, சிவாத்மிகா, ராகுல் விஜய் உள்பட பலர் நடித்து இருக்கிறார்கள். மொத்தம் ஐந்து கதாபாத்திரங்கள் மட்டுமே நடித்துள்ள இந்த படத்தின் கதை ஒன்றோடு ஒன்று இணைந்த வாழ்க்கை பற்றிய கதையில் உருவாகி இருக்கிறது. இந்த பஞ்ச தந்திரம் படம் டிசம்பர் 9ம் தேதி திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.