‛வாரணாசி' படத்தால் நாடே பெருமைப்படும்: மகேஷ் பாபு பேச்சு | ஆறு வருடமாக பாலியல் டார்ச்சர் செய்த துணை நடிகை மீது போலீஸில் நடிகர் புகார் | பிடிவாதமாக பெட்ரோலை குடித்த அஜித்; திருப்பதியில் அஜித் எடுத்த ரிஸ்க் | பிளாஷ்பேக்: முதல் ஒளி வடிவம் பெற்ற ஜெயகாந்தனின் “உன்னைப் போல் ஒருவன்” | ஹிந்தி பட புரமோஷனில் காதலுக்கு விளக்கம் கொடுத்த தனுஷ் | ‛நூறு சாமி'க்காக காத்திருக்கும் ‛லாயர்' | மனைவிக்கு ‛தடா' போட்ட சார்பட்டா நடிகர் | நடிகருக்காக சீன்களை சுடும் இயக்குனர்கள் | லாவண்யாவின் ஸ்(வரம்) | குழந்தை நட்சத்திரத்தில் இருந்து நாயகி வரை: தன்னம்பிக்கையோடு தனலெட்சுமி |

சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில், இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில், தனுஷ் கதாநாயகனாக நடிக்கும் படம் “கேப்டன் மில்லர்”. இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க முன்னணி கன்னட கன்னட நடிகர் சிவராஜ்குமார் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சந்தீப் கிஷன் மற்றும் பிரியங்கா அருள் மோகன் ஆகியோரும் நடிக்கிறார்கள். இவர்களுடன் ஜான் கொக்கன், நிவேதிதா சதீஷ், குமரவேல், டேனியல் பாலாஜி, மூர், நாசர், விஜி சந்திரசேகர், சுவயம்சிதா தாஸ், பிந்து, அருணோதயன், ஆண்டனி, பால சரவணன் மற்றும் பலர் நடிக்கின்றனர். ஜி.வி பிரகாஷ் இசை அமைக்கிறார்.
படத்தின் இயக்குனர் அருண் மாதேஸ்வரன் ஏற்கெனவே ராக்கி, சாணிக்காயிதம் படங்களை இயக்கியவர். இந்த படங்கள் மேக்கிங் வகையில் பாராட்டப்பட்டாலும் வசூலில் தோல்வியை சந்தித்த படங்கள். கேப்டன் மில்லர் 1930- காலகட்டத்தை பின்னணியாகக் கொண்ட படமாகும். இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் ஹிந்தி மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியிடப்படவுள்ளது.