ரீல்ஸ் பிரபலங்கள், ரியலில் திணறுகிறார்கள் : வடிவுக்கரசி ஆதங்கம் | ஜன.,9ல் ரிலீசாகிறது 'ஜனநாயகன்': அதிகாரப்பூர்வ அறிவிப்பு | முன்பதிவில் மட்டுமே 58 கோடி வசூலித்த 'எல் 2 எம்புரான்' | கஜினி 2 பற்றி ஏ.ஆர்.முருகதாஸ் வெளியிட்ட தகவல் | டியர் ஸ்டூடன்ட்ஸ் படப்பிடிப்பு முடிந்தது | பிரபாஸிற்கு வில்லன் ஆகிறாரா விஜய் சேதுபதி? | ''இந்த மாதிரி படம் எடுங்க.. ஜெயிக்கலாம்'': வெற்றி சூத்திரம் சொன்ன பாக்யராஜ் | 'குபேரா' இயக்குவதில் பெருமை : சேகர் கம்முலா | என் ஹார்ட் டிஸ்கை தாங்க.... : பெப்சி அலுவலகம் முன்பு நடிகை சோனா திடீர் போராட்டம் | விஜய்யின் 'ஜனநாயகன்' : முக்கிய அறிவிப்பு |
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் படத்தில் நடித்த பிறகு கமலின் சினிமா மார்க்கெட் மீண்டும் சூடு பிடித்துள்ளது. தற்போது ஷங்கர் இயக்கும் இந்தியன் 2 படத்தில் நடித்து வரும் கமல்ஹாசன் அடுத்தபடியாக எச். வினோத் இயக்கும் படத்தில் நடிக்கிறார். அதையடுத்து மணிரத்னம் இயக்கும் படத்தில் நடிக்க போகிறார். அதன் பிறகு வெற்றிமாறன், பா. ரஞ்சித் ஆகியோர் இயக்கும் படங்களிலும் அடுத்தடுத்து நடிக்க போகிறாராம். இதன் காரணமாக இன்னும் நான்கு ஆண்டுகள் வரை கமலின் கால்ஷீட் பிஸியாக இருக்கும் என்கிறார்கள். அதனால் விக்ரம் படத்திற்கு பிறகு மலையாள இயக்குனர் மகேஷ் நாராயணன் இயக்கத்தில் தான் நடிக்க இருந்த படத்தை தற்போது கிடப்பில் போட்டுள்ளார் கமல். இதனால் இந்த படம் எப்போது உருவாகும் என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த படத்தில் கமல்ஹாசன் திரைக்கதையும் எழுத இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.