காதலி ஷீத்தலை பிரிந்த பப்லு! | துபாய் வீட்டில் கிருஷ்ண கீர்த்தனை நடத்திய ஏ.ஆர்.ரகுமான்! வைரலாகும் வீடியோ!! | 46 வயதாகும் ரெடின் கிங்ஸ்லி சீரியல் நடிகை சங்கீதாவை மணந்தார்! | அடுத்த ஆண்டு ஏப்ரலில் துப்பறிவாளன்-2 படப்பிடிப்பு தொடக்கம்! | கவின், எஸ்.ஜே.சூர்யா, பிரியங்கா மோகன் புதிய கூட்டணி! | சலார் படத்திற்கு தணிக்கை குழு 'ஏ' சான்றிதழ்? | “மதிமாறன்” பர்ஸ்ட் லுக் வெளியீடு | டிவி நடிகர் சித்து நாயகனாக அறிமுகமாகும் 'அகோரி' | மீண்டும் சர்ச்சை: 'வாடிவாசல்' சூர்யா நடிப்பாரா அல்லது விலகுவாரா? | டிசம்பர் 15ல் 8 புதிய படங்கள் ரிலீஸ் |
மிரள் படத்திற்கு பின் பரத் - வாணி போஜன் மீண்டும் இணைந்து நடித்துள்ள படம் ‛லவ்'. பரத்தின் 50வது படமாக உருவாகி உள்ள இதில் விவேக் பிரசன்னா, டேனியல் அனி போப் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். ஆர்பி பாலா இயக்கி உள்ளார். திரில்லர் படமாக எடுக்கப்பட்டுள்ளது. இதன் டீசர் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது.
இந்த பட விழாவில் பேசிய வாணி போஜன், ‛‛லவ் ஒரு வித்தியாசமான படம். நடிகையாக என்னை நிரூபிக்க ஒரு நல்ல படம் இது. மிரள் படத்திற்கும், இதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கும். இந்த படம் முழுக்கவே நிறைய சவால்கள் இருந்தன. படத்தில் பரத்திடம் நிறைய அடி வாங்கி நடித்தேன். நானும் அடித்துள்ளேன். அந்தளவிற்கு ரியலாக நடித்துள்ளோம். இந்த படம் உருவான சமயத்தில் உடலில் ஆங்காங்கே காயங்கள் இருக்கும். இதை பார்த்துவிட்டு எனது வீட்டில் நீ படத்தில் நடிக்க போகிறாயா இல்ல யாரிடமும் சண்டை போட போகிறாயா என கேட்டனர். அந்தளவுக்கு அனைவரும் கடினமாக உழைத்துள்ளோம்'' என்றார்.