விக்ரமின் ‛துருவ நட்சத்திரம்' விரைவில் திரையில் மின்னப் போகிறது | வைரலாகும் விக்ரம் படத்தின் திரைக்கதை புத்தகம் | மகிழ்திருமேனிக்கு அஜித் போட்ட உத்தரவு | தனுஷின் வாத்தி டிரைலர் நாளை வெளியாகிறது | என்னை வேவு பார்ப்பவர்களை வீடு புகுந்து அடிப்பேன் : கங்கனா ஆவேசம் | கடும் குளிரில் விஜய் படக்குழுவினர் அவதி: சென்னை திரும்பினார் த்ரிஷா | ஹீரோயின் ஆன யு-டியூப் பிரபலம் | 'லியோ' படத்திற்கு இப்போதே முன்பதிவு ஆரம்பம் | ‛ரைட்டர் பத்மபூஷன்' படம் பாருங்கள் ; சிபாரிசு செய்யும் மகேஷ்பாபு | பதான் இயக்குனருடன் சேர்ந்து பிரபாஸ் - ஹிருத்திக் படத்தை புதுப்பிக்கும் புஷ்பா தயாரிப்பாளர்கள் |
தமிழில் 'சுல்தான்' படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் கன்னட நடிகையான ராஷ்மிகா மந்தனா. ஆனால், அதற்கும் முன்பாகவே அவர் தெலுங்கில் நடித்து தமிழிலும் டப்பிங் ஆகி வெளிவந்த 'கீதா கோவிந்தம், டியர் காம்ரேட், சரிலேறு நீக்கெவரு, பீஷ்மா' ஆகிய படங்களின் மூலம் இங்குள்ள ரசிகர்களிடத்திலும் பிரபலமானார்.
அடுத்து விஜய் ஜோடியாக 'வாரிசு' படத்தில் கதாநாயகியாக நடித்திருக்கிறார். வரும் பொங்கலுக்கு இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது. இன்ஸ்டாகிராமில் 35 மில்லியனுக்கும் அதிகமான பாலோயர்களை வைத்திருப்பவர் ராஷ்மிகா. அவரது தளத்தில் அவர் பதிவிடும் புகைப்படங்கள் எப்போதுமே லட்சக்கணக்கான லைக்குகளை அள்ளம்.
இரண்டு நாட்களுக்கு முன்னதாக அவர் ஹிந்தியில் நடித்து வெளிவந்த 'குட்பை' படத்தின் ஓடிடி வெளியீடு பற்றிய தகவலுடன் இரண்டே இரண்டு புகைப்படங்களையும் பதிவிட்டிருந்தார். அந்தப் பதிவிற்கு 27 லட்சம் லைக்குகள் கிடைத்துள்ளது. கன்னட சினிமாவில் ராஷ்மிகா மீது பலரும் தங்களது வெறுப்புகளைக் காட்டி வரும் நிலையில் அவருக்குக் கிடைத்து வரும் இத்தனை லட்சம் லைக்குகள் அவருக்கு ரசிகர்களிடம் இருக்கும் ஆதரவை நிரூபிப்பதாகவே உள்ளது.