இப்ப, தமிழ் சினிமாவில் டாப் 5 ஹீரோயின் யார் தெரியுமா? | சூர்யாவின் ‛கருப்பு' ரிலீஸ் எப்போது? | ராஷ்மிகாவின் ‛மைசா' படத்தில் இணையும் புஷ்பா 2 வில்லன் | பராசக்தி படப்பிடிப்பு முடிவடைந்தது | நவம்பர் 21-ல் ரீரிலீஸ் ஆகும் ப்ரண்ட்ஸ் | லாபத்தில் முதலில் நுழைந்த 'பைசன்' | தீபாவளிக்கு ஜனநாயகன் அப்டேட் ஏனில்லை | பொங்கலுக்கு நடிகர் சங்க கட்டடம் திறப்பு : விஷால் திருமணம் எப்போது | பிக்பாஸில் வந்து விட்டால் மட்டும் நடிகையாகி விட முடியாது: தர்ஷிகா | ஹீரோயின் ஆனார் 'அரண்மனை' ஹர்ஷா |
பாகுபலி திரைப்படத்தில் ஹீரோவுக்கு இணையாக முக்கியத்துவம் வாய்ந்த வில்லன் வேடத்தில் நடித்து தென்னிந்திய மொழி ரசிகர்கள் அனைவரின் மனதிலும் இடம் பிடித்தவர் நடிகர் ராணா. தற்போது தெலுங்கில் பிசியாக நடித்து வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் விமானப்பயணம் மேற்கொண்ட ராணா ஹைதராபாத்தில் வந்து இறங்கியபோது தன்னுடைய லக்கேஜ் ஒன்று மிஸ் ஆனதை கவனித்துள்ளார். இதுகுறித்து அங்கிருந்த விமான ஊழியர்களிடம் கேட்டபோது அவருடைய லக்கேஜ் எப்படி மிஸ் ஆகி இருக்கக்கூடும் என்பது பற்றி கூட யாராலும் தகவல் சொல்ல முடியாமல் கையை பிசைந்துள்ளனர்.
இதுபற்றி தனது சோசியல் மீடியா பக்கத்தில் குறிப்பிட்டுள்ள ராணா, இந்தியாவிலேயே மிக மோசமான விமான சர்வீஸ் என்று சம்பந்தப்பட்ட பிரபல விமான நிறுவனத்தை விமர்சித்துள்ளார். இதையடுத்து அந்த விமான நிறுவனம் ராணாவிடம் வருத்தம் தெரிவிப்பதாக கூறியதுடன் விரைவில் மிஸ் ஆன அவரது லக்கேஜையும் கண்டுபிடித்து தருவதாக உறுதியளித்துள்ளது.