நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் திரைப்படம் கேப்டன் மில்லர்.
இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். தனுஷிற்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்கிறார். மேலும் இப்படத்தில் தெலுங்கு நடிகர் சந்தீப் கிஷான், நிவேதா சதிஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்து அடுத்தக்கட்ட படப்பிடிப்பிற்காக செட் அமைக்கும் வேலைகள் நடந்து வருகிறது. அடுத்தகட்ட படப்பிடிப்பு வருகின்ற டிசம்பர் 16ம் தேதி குற்றாலத்தில் துவங்க இருக்கிறது. கன்னட நடிகர் சிவராஜ்குமாரும் தனுசுடன் இப்படத்தில் இணைந்து நடிக்கவுள்ளார் என சமீபத்தில் தகவல் வெளியானது .
இந்நிலையில் இன்று நடைபெற்ற ஒரு பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பேசிய சிவராஜ்குமார், இப்படத்தில் தனுசுக்கு அண்ணனாக நான் நடிக்கிறேன் என தெரிவித்துள்ளார்.