
டிசம்பர் 2 வெளியீட்டில், இரு முனைப் போட்டி மட்டுமே
விஜய் சேதுபதியின் முந்தைய தியேட்டர் வெளியீடுகள் சொல்லிக் கொள்ளும்படி இல்லை. அதனால், "டிஎஸ்பி" படத்தின் வெற்றியை அவர் அதிகம் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார். விஷ்ணு விஷால் நடித்து இந்த ஆண்டின் துவக்கத்தில் வெளிவந்த "எப்ஐஆர்" படம் வியாபார ரீதியாக வெற்றி பெற்ற படமாக அமைந்தது. இப்போது அவர் நடித்து வெளிவர உள்ள "கட்டா குஸ்தி" படம் தமிழ், தெலுங்கில் வெளியாகிறது. தமிழில் உதயநிதி ஸ்டாலினும், தெலுங்கில் நடிகர் ரவி தேஜாவும் இப்படத்தை வெளியிடுகிறார்கள்.
இரண்டு படங்களுமே எந்தவிதமான பரபரப்பும் இல்லாமல் வெளியாகிறது. ஆன்லைன் முன்பதிவுகளும் மிகச் சுமாராகவே இருக்கின்றன. கடந்த வாரம் வெளியான படங்கள் பெரிதாக வசூலிக்காத நிலையில் இந்த வாரம் வெளியாக உள்ள படங்கள் எப்படி இருக்கப் போகிறதோ என தியேட்டர்காரர்கள் கவலையுடன் இருக்கிறார்கள். டிசம்பரில் வரும் மற்ற படங்களாவது வசூலிக்குமா என்பது அவர்களது எதிர்பார்ப்பு. இல்லையென்றால் 2023 பொங்கல் வரை அவர்கள் காத்திருக்க வேண்டும்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!