சின்மயி மன்னிப்பு : இயக்குனர் பேரரசு பதிலடி | கைவசம் 3 படங்கள் : தமிழில் கால் பதிக்க நினைக்கிறார் கிர்த்தி ஷெட்டி | கிண்டல், கேலி, நெகட்டிவ் எண்ணம் : சமூக வலைதளங்களை தவிர்க்கும் திரைபிரபலங்கள் | நல்ல படம் பண்ணிட்டு ரிட்டையர்டு : கமல்ஹாசன் | விஜய் பட இயக்குனர் உடன் இணையும் சல்மான் | பாண்டிராஜ் படத்தில் ஜெயராம், ஊர்வசி | உறவு பிரியாமல் இருக்க 'பூதசுத்தி விவாஹம்' செய்த சமந்தா | ரஜினி பிறந்தநாளில் ‛எஜமான்' ரீ ரிலீஸ் | மூளை குறைவாக இருப்பதால்தான் நடிகராக இருக்கிறேன்: சிவகார்த்திகேயன் | பிரபல பாலிவுட் இயக்குனரின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்கும் தமன்னா |

சுகுமார் இயக்கத்தில், தேவிஸ்ரீபிரசாத் இசையமைப்பில், அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா மற்றும் பலர் நடிப்பில் கடந்த வருடம் வெளியான படம் 'புஷ்பா'. தெலுங்கில் தயாரான இந்தப் படம் தமிழ், ஹிந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளிலும் டப்பிங் ஆகி வெளியானது.
தற்போது படத்தை ரஷ்ய மொழியில் டப்பிங் செய்து அங்கு டிசம்பர் 8ம் தேதி வெளியிட உள்ளனர். அதற்கு முன்பு டிசம்பர் 1 மாஸ்கோவிலும், டிசம்பர் 3 செயின் பீட்டர்ஸ்பர்க்கிலும் படத்தின் பிரிமீயர் காட்சிகள் நடைபெற உள்ளன. அதில் கலந்து கொள்வதற்காக படத்தின் கதாநாயகன் அல்லு அர்ஜுன் ரஷ்யா சென்றுள்ளார். படக்குழுவைச் சேர்ந்த சில முக்கிய கலைஞர்களும் ரஷ்யாவிற்கு செல்ல உள்ளனர்.
இந்நிலையில் தற்போது ரஷ்ய மொழியில் 'புஷ்பா' படத்தின் டிரைலரை யு டியுபில் வெளியிட்டுள்ளனர். இந்தியப் படங்களை இந்திய மொழிகளில் மட்டுமே பார்த்தவர்களுக்கு ரஷ்ய மொழியில் 'புஷ்பா' டிரைலரைப் பார்ப்பது வித்தியாசமான அனுபவத்தைக் கொடுக்கும். இந்திய மொழிகளில் அல்லு அர்ஜுன் கதாபாத்திரத்தின் வசன உச்சரிப்பு வித்தியாசமாக இருக்கும். அது போலவே ரஷ்ய மொழியிலும் டப்பிங் செய்துள்ளனர்.




