''அப்பா ஒரு குழந்தை; ஆதாரமற்ற வதந்திகளை பரப்பாதீர்கள்'' - ஏ.ஆர்.ரஹ்மான் மகன் வேதனை | அழகுக்காக ஸ்ரீதேவி பட்ட சிரமம் : போனி கபூர் தகவல் | 'வேவ்ஸ்' ஓ.டி.டி., தளம் : பிரசார் பாரதி துவக்கம் | நவ.26ம் தேதியில் விடுதலை-2 படத்தின் இசை வெளியீட்டு விழா | தெலுங்கில் அறிமுகமாகும் மமிதா பைஜூ | திருமணத்திற்கு தயாராகும் தமன்னா | திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த சந்தானம் | நடிகை சீதா வீட்டில் நகை திருட்டு : போலீசில் புகார் | சமந்தா சொல்வது உண்மைதான் : அர்ஜுன் கபூர் ஒப்புதல் | சர்ச்சைகளை நீர்த்துப்போக செய்யும் விதமாக தயாராகிறதா மோகன்லால் - மம்முட்டி படம்? |
தமிழ் சினிமாவில் எழுத்தாளர்களின் பங்களிப்பு குறைவாகவே உள்ள நிலையில் மறைந்த எழுத்தாளர் சுஜாதாவுக்கு அடுத்ததாக மிகப்பெரிய அளவில் ஷங்கர், மணிரத்னம் போன்ற இயக்குனர்களுடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பைப் பெற்றவர் எழுத்தாளர் ஜெயமோகன். டூ பாயிண்ட் ஓ, சமீபத்தில் வெளியான பொன்னியின் செல்வன், தற்போது தயாராகி வரும் இந்தியன்-2 ஆகிய படங்களுக்கு கதை, வசனத்தில் தனது பங்களிப்பை கொடுத்த ஜெயமோகன், தற்போது மலையாளத்தில் இளம் நடிகரான ஆசிப் அலி என்பவர் நடிக்கும் புதிய படத்திற்கு கதை எழுதியுள்ளார். சமீபத்தில் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் வெளியாகி வெற்றிபெற்ற கூமன் என்கிற படத்தின் கதாநாயகனாக நடித்தவர் தான் இந்த ஆசிப் அலி.
ஜெயமோகன் கதை எழுதும் இந்த புதிய படத்தை இயக்குவதன் மூலம் பிரபல மலையாள இயக்குனர் ஷாஜி கைலாஷின் மகன் ஜெகன் ஷாஜி கைலாஷ் இயக்குனராக அறிமுகமாகிறார். இதற்கு முன்னதாக தனது தந்தை இயக்கத்தில் உருவான கடுவா, காபா மற்றும் அலோன் உள்ளிட்ட படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றி உள்ளார் ஜெகன். தனது புதிய படத்திற்கான கதை விவாதத்தின்போது கதாசிரியர் ஜெயமோகன், ஹீரோ ஆசிப் அலியுடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றையும் இவர் வெளியிட்டுள்ளார்.