ஆக.,14ல் 'கூலி' ரிலீஸ்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ஜிவி பிரகாஷ், சைந்தவி விவாகரத்து வழக்கு: செப்.25ல் நேரில் ஆஜராக உத்தரவு | சத்யராஜ், காளி வெங்கட் இணைந்து நடிக்கும் 'மெட்ராஸ் மேட்னி' | மே மாதத்தோடு விஜய்யின் 'ஜனநாயகன்' படப்பிடிப்பு முடிவடைகிறது! | சோபிதா துலிபாலாவின் அடுத்த தமிழ் படம்! | ரேஸ் காரை ஓட்டும் அஜித்தின் மகன் ஆத்விக்! வைரலாகும் வீடியோ!! | எதிர்பார்த்ததை விட பாசிட்டிவான விமர்சனங்கள் - விக்ரம் வெளியிட்ட வீடியோ! | பரபரப்பில்லாமல் இன்றைய வெளியீடுகள் | ஆறு மாதங்கள் தள்ளிப் போனது 'இட்லி கடை' | கார் பார்க்கிங் பிரச்னை : பிக்பாஸ் பிரபலம் தர்ஷன் கைது |
அமரர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவல் மணிரத்னம் இயக்கத்தில் திரைப்படமாக உருவாகி, அதன் முதல் பாகம் கடந்த செப்டம்பர் 30ம் தேதி வெளியாகி அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்து விட்டது. இங்கே இந்தியாவில் மட்டுமல்லாமல் உலகமெங்கும் உள்ள தமிழ் ரசிகர்கள் இந்த படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பை வழங்கியுள்ளனர். இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, திரிஷா மற்றும் வானதி கதாபாத்திரத்தில் நடித்த சோபிதா துலிபாலா ஆகியோர் சமீபத்தில் ஒன்று கூடி மீண்டும் தங்களது படப்பிடிப்பு கொண்டாட்டங்களை மீட்டெடுத்துள்ளனர்.
இதுகுறித்த இரண்டு புகைப்படங்களை சோபிதா துலிபாலா தனது சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார். அதில் ஒரு புகைப்படத்தில் இந்த அனைவரின் முகங்கள் குளோசப்பிலும் இன்னொரு புகைப்படத்தில் இவர்கள் ஐந்து பேரின் ஒற்றை பாதங்கள் குளோசப்பிலும் இடம் பெற்றுள்ளன. இந்த படத்தை பார்த்துவிட்டு ரசிகர்கள் பலரும் இந்த நிகழ்வில் எங்கே நந்தினியை காணவில்லை என்று ஐஸ்வர்யா ராய் பற்றியே தங்களது கமெண்டுகளை வெளிப்படுத்தியுள்ளனர்.