டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் |

பாலிவுட்டின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவர் ஷாரூக்கான். நாயகனாக மட்டுமல்லாது பல்வேறு பிசினஸ்களில் முதலீடு செய்துள்ளார். சொந்தமாக படத் தயாரிப்பு நிறுவனம், கோல்கட்டா ஐபிஎல் அணியின் உரிமையாளர் உள்ளிட்ட பல பிசினஸ்களை செய்து வருகிறார்.
மும்பையின் பாந்த்ரா பகுதியில் ஷாரூக்கிற்கு சொந்தமான 'மன்னாத்' என்ற பெயர் கொண்ட பெரிய பங்களா ஒன்று உள்ளது. அங்குதான் ஷாரூக் தன் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். அந்த வீட்டின் முன்பு ரசிகர்கள் அடிக்கடி ரசிகர்கள் புகைப்படங்களை எடுத்துக் கொள்வார்கள். தற்போது அந்த வீட்டின் முகப்பில் உள்ள பெயர்ப் பலகைகள் மாற்றப்பட்டு புதிய வடிவில் பொருத்தப்பட்டுள்ளன. அவற்றை ரசிகர்கள் 'டைமண்ட்' பெயர்ப் பலகை என அழைத்து வருகிறார்கள்.
கடந்த சில மாதங்களாக பழைய பெயர் பலகையை நீக்கிவிட்டிருந்தார்கள். அது குறித்து ரசிகர்கள் பல்வேறு விதமான தகவல்களை வெளியிட்டு வந்தார்கள். இந்நிலையில் தற்போது புத்தம் புதுப் பொலிவுடன் அந்தப் பெயர் பலகைகள் வீட்டு கேட்டின் இருபுறமும் வைக்கப்பட்டுள்ளன. அவற்றில் ஷாரூக் உண்மையிலேயே வைரங்களைப் பதித்துள்ளாரா அல்லது வைரங்களைப் போல் மின்னும் கற்களைப் பதித்துள்ளாரா என அவரது ரசிகர்கள் ஆச்சரியப்பட்டு புகைப்படங்களைப் பதிவிட்டு வருகிறார்கள்.