‛பொன்னியின் செல்வன் 2' : ‛அக நக' முதல்பாடல் வெளியானது | அதிதி ஷங்கரின் அடுத்த படம் | தனுசுடன் மீண்டும் இணையும் மாரி செல்வராஜ் | விஜய் சேதுபதியை இயக்கும் மிஷ்கின் | இயற்கை விவசாயத்தில் இறங்கிய நடிகர் கிஷோர் | படப்பிடிப்பில் தவறாக நடந்தாரா யஷ்? - ஸ்ரீநிதி ஷெட்டி விளக்கம் | நிதின் பிறந்தநாள் அன்று ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ் | விஷ்ணுவர்தன் புதிய பட படப்பிடிப்பு துவங்கியது | ரிலீஸுக்கு தயாராகும் வணங்காமுடி ; டப்பிங் பணிகள் தீவிரம் | தன்னுடன் ஜோடியாக நடித்த நடிகையை பிளாக் செய்து பின் அன்பிளாக் செய்த அல்லு அர்ஜுன் |
கமலின் விக்ரம் படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் அடுத்தபடியாக விஜய் 67வது படத்தை இயக்குவதற்கு தயாராகிக் கொண்டிருக்கிறார். இந்த படத்தில் விஜய்யுடன் நடிக்கும் நடிகர், நடிகைகள் குறித்த தகவல் இன்னும் வெளியாகாத நிலையில், இப்படத்தில் சஞ்சய்தத், அர்ஜுன், கவுதம் மேனன், பிரித்விராஜ் , மிஷ்கின் ஆகியோர் வில்லன்களாக நடிப்பதாகவும், திரிஷா, சமந்தா, கீர்த்தி சுரேஷ் ஆகியோரும் இப்படத்தில் முக்கிய வேடங்களில் நடிக்க இருப்பதாகவும் தொடர்ந்து செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.
இந்நிலையில் இதற்கு முன்பு லோகேஷ் கனகராஜ் இயக்கிய படங்களின் கேரக்டர்களும் இப்படத்தில் இடம் பெறுவதாக கூறப்படும் நிலையில், விக்ரம் படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்திருந்த நரேனும் விஜய் 67வது படத்தில் நடிப்பதாக செய்திகள் வெளியாகின. ஆனால் அந்த செய்தியை அவர் மறுத்துள்ளார்.
அதுகுறித்து அவர் கூறுகையில், விஜய் 67 வது படத்தில் நான் நடிக்கவில்லை. அந்த படத்தில் விக்ரம் படத்தில் நான் நடித்த கேரக்டர் இடம் பெற்றால் யூனிவர்ஸ் முற்றிலுமாக மாறிவிடும் என்று கூறும் நரேன், கைதி- 2 படத்தில் கண்டிப்பாக நடிக்கிறேன். அந்த படத்தை தான் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருப்பதாகவும் கூறுகிறார்.