இப்ப, தமிழ் சினிமாவில் டாப் 5 ஹீரோயின் யார் தெரியுமா? | சூர்யாவின் ‛கருப்பு' ரிலீஸ் எப்போது? | ராஷ்மிகாவின் ‛மைசா' படத்தில் இணையும் புஷ்பா 2 வில்லன் | பராசக்தி படப்பிடிப்பு முடிவடைந்தது | நவம்பர் 21-ல் ரீரிலீஸ் ஆகும் ப்ரண்ட்ஸ் | லாபத்தில் முதலில் நுழைந்த 'பைசன்' | தீபாவளிக்கு ஜனநாயகன் அப்டேட் ஏனில்லை | பொங்கலுக்கு நடிகர் சங்க கட்டடம் திறப்பு : விஷால் திருமணம் எப்போது | பிக்பாஸில் வந்து விட்டால் மட்டும் நடிகையாகி விட முடியாது: தர்ஷிகா | ஹீரோயின் ஆனார் 'அரண்மனை' ஹர்ஷா |
தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழி படங்களுக்கும் பிசியாக இசையமைத்து வருகிறார் அனிருத். தெலுங்கில் அஞ்ஞானவாசி, யுடர்ன், ஜெர்சி, கேங்லீடர் போன்ற படங்களுக்கு ஏற்கனவே இசையமைத்துள்ள அனிருத், தற்போது ஜூனியர் என்டிஆர் நடிக்கும் 30 வது படத்திற்கு இசையமைக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். கொரட்டல்ல சிவா இயக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது. இந்த நிலைகளில், தற்போது ஜூனியர் என்டிஆரின் முப்பதாவது படத்தின் கம்போசிங் பணிகளை தான் தொடங்கி இருப்பதாக அறிவித்துள்ளார் அனிருத். இதுதொடர்பாக இயக்குனர் கொரட்டல்ல சிவாவுடன் இணைந்து தான் எடுத்த ஒரு புகைப்படத்தையும் வெளியிட்டு இருக்கிறார். இவரின் இந்த பதிவிற்கு 24 மணி நேரத்தில் 38 ஆயிரத்துக்கும் மேல் லைக்குகள் கிடைத்தன. ராஜமவுலியின் ஆர்ஆர்ஆர் படத்திற்கு பிறகு ஜூனியர் என்டிஆர் நடிக்கும் படம் இதுவாகும். இப்படம் தவிர கமல்ஹாசனின் இந்தியன் 2, ரஜினியின் ஜெயிலர், ஷாருக்கானின் ஜவான் போன்ற படங்களுக்கும் இசையமைத்து வருகிறார் அனிருத்.