இளம் நடிகருடன் காதலா? - கோட் நடிகை விளக்கம் | ஏஆர் ரஹ்மான் பிரிவுக்கும், மோகினி டே பிரிவுக்கும் சம்பந்தம் இல்லை: சாய்ரா பானு வழக்கறிஞர் விளக்கம் | என் மகளை மீட்டு தந்தது செட்டிக்குளங்கரா தேவி தான் : நயன்தாரா அம்மா உருக்கம் | மலையாள வாரிசு வில்லன் நடிகர் மேகநாதன் மறைவு | கிஸ் படத்திலிருந்து அனிரூத் விலகலா? | சம்பந்தி இது சரியில்லை : ‛ராஜாகிளி' பட விழாவில் அர்ஜூன் கலாட்டா | ராம் பொதினேனிக்கு ஜோடியான பாக்யஸ்ரீ போர்ஸ் | சிவகார்த்திகேயனுக்கு வில்லனா? மறுப்பு தெரிவித்த விஷால் | ஹாலிவுட் மியூசிக் மீடியா விருது: ஆடுஜீவிதம் பின்னணி இசைக்காக வென்றார் ஏ.ஆர்.ரஹ்மான் | விஜய் 69வது படத்தில் இணையும் வரலட்சுமி |
தமிழ் சினிமாவில் வசனங்களுக்கு என்று பெயர் பெற்றவர் ஆரூர்தாஸ்(91). சென்னை, தி.நகரில் வசித்து வந்த ஆரூர்தாஸ் வயதுமூப்பு காரணமாக காலமானார். அவரின் மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
எம்ஜிஆர், சிவாஜி, ஜெமினி என அன்றைய திரை ஜாம்பவான்களின் படங்களுக்கு தன் வசனங்கள் மூலம் உயிர் தந்தவர் ஆரோக்கிய சாமி (என்ற) ஜேசு என்ற ஆரூர்தாஸ். இன்றைக்கும் சிவாஜி கணேசனின் பாசமலர் படம் பேசப்படுகிறது என்றால் அதில் சிவாஜி, சாவித்திரியின் நடிப்பை தாண்டி ஆரூர்தாஸின் வசனங்களும் முக்கியமானது. அப்படிப்பட்ட ஆரூர்தாஸின் திரைப்பயணத்தை சற்றே திரும்பி பார்ப்போம்...
அன்றைய ஒருங்கிணைந்த திருவாரூர் மாவட்டத்தில் சந்தியாகு நாடார் - ஆரோக்கிய மேரி (என்ற) பிச்சையம்மாள் ஆகியோருக்கு மகனாக 1931ல் செப்., 10ம் தேதி பிறந்தவர் ஆரூர்தாஸ். இவரது நிஜ பெயர் ஆரோக்கிய சாமி (என்ற) யேசுதாஸ். தனது ஊரான திருவாரூர் மற்றும் தனது பெயரின் பாதியை இணைந்து ஆரூர்தாஸ் என பெயர் மாற்றிக் கொண்டார்.
நாகப்பட்டினத்தில் உள்ள ஒரு ஆரம்ப பள்ளியில் தனது பள்ளிப்படிப்பை ஆரம்பித்து பின் திருவாரூரில் உள்ள உயர்நிலைப் பள்ளியிலும் தனது பள்ளிப்படிப்பை தொடர்ந்தார். மாணவப் பருவத்திலேயே வாசக சாலைக்கு சென்று நிறைய நூல்களை படிக்கும் ஆர்வம் ஆரூர் தாஸ்க்கு இருந்தது. ஈவேராவின் 'விடுதலை', 'குடியரசு' அண்ணாதுரையின் 'திராவிட நாடு' பாரதியார் மற்றும் பாரதிதாசனின் கவிதைகள், விக்டர் ஹியுகோ மற்றும் அலெக்ஸாண்டர் டூமாஸின் தமிழாக்கம் செய்யப்பட்ட நூல்கள் போன்றவை அன்றைய நாட்களில் இவர் விரும்பி படித்தவைகளில் குறிப்பிட்டு கூறலாம்.
நாடக ஆசை
எஸ்எஸ்எல்சி வரை படித்த ஆரூர் தாஸ்க்கு முன்னாள் முதல்வர் கருணாநிதி எழுதிய நாடகங்களான 'தூக்கு மேடை', 'மந்திரி குமாரி' போன்ற நாடகங்களை பார்த்து தானும் இதேப்போல் நாடகங்களை உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கியது. அதன் விளைவு தன் நண்பரான் சோமசுந்தரத்தோடு 'ஜென்ம தண்டனை' என்ற நாடகத்தை எழுதி தனது நாடக பயணத்தை துவக்கினார்.
சினிமா பயணம்
அதன்பின் சினிமாவிற்கு வசனம் எழுத வேண்டும் என்ற அவருடைய நீண்ட நாள் ஆசைக்கு தஞ்சையில் நாடகக்குழு நடத்தி வரும் ராமையாதாஸ் என்பவரின் அறிமுகம் கிடைக்க, அப்போது அவர் டிஆர் மஹாலிங்கத்தின் மச்சரேகை' மற்றும் 'பாதாள பைரவி' போன்ற படங்களுக்கும் கதை வசனம் எழுதிக் கொண்டிருக்க அவரிடம் உதவியாளராக சேர்ந்து சில டப்பிங் படங்களுக்கும் வசனமெழுதும் நுணுக்கங்களையும் கற்றுத் தேர்ந்தார்.
பேச வைத்த பாசமலர்
ஆரூர் தாஸ் முதன் முதலாக கதை வசனம் எழுதிய திரைப்படம் 1959ம் ஆண்டு சாண்டோ சின்னப்பத் தேவர் தயாரித்து, இயக்குநர் எம்ஏ திருமுகம் இயக்கத்தில் வெளிவந்த "வாழ வைத்த தெய்வம்" திரைப்படமாகும். 1961ம் ஆண்டு சிவாஜி கணேசனின் நடிப்பில் வெளிவந்து வெள்ளிவிழா கொண்டாடிய 'பாசமலர்' திரைப்படத்திற்கும் வசனம், எழுதி தமிழ் திரையுலக வரலாற்றில் இடம் பிடித்தார். இந்த வெற்றிக்குப்பிறகு ஒட்டுமொத்த சினிமா கலைஞர்களின் பாராட்டைப் பெற்றார் ஆரூர் தாஸ். இதே ஆண்டில் எம்ஜிஆருக்காக தேவர் பிலிம்ஸ் தயாரிப்பில் வெளிவந்து மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் 'தாய் சொல்லைத் தட்டாதே' இந்த படத்திற்கும் வசனம் எழுதி தனது வெற்றி பயணத்தை தொடர்ந்தார்.
நகமும் சதையும் போல...
இயக்குநர் ஏ சி திருலோகசந்தருக்கும், ஆரூர்தாஸ்க்கும் உள்ள நட்பு நகமும் சதையும் போன்றது. இவர் இயக்கிய முதல் திரைப்படமான வீரத்திருமகனில் ஆரம்பமான இவர்களது கூட்டணி 'நானும் ஒரு பெண்' காக்கும் கரங்கள்', அன்பே வா' 'இரு மலர்கள்' 'தங்கை' 'பைலட் பிரேம்நாத்' 'விஸ்வரூபம்' 'வசந்தத்தில் ஓர் நாள்', குடும்பம் ஒரு கோயில்' 'பத்ரகாளி' 'வணக்குத்துக்குரிய காதலியே' என்று தொடர்ந்தது மட்டுமல்லாமல் ஒரே இயக்குநரின் அதிகப்படியான படங்களுக்கு வசனம் எழுதிய பெருமையும் ஆருர் தாஸையே சேரும்.
சிவாஜிக்கு 28, எம்ஜிஆருக்கு 25
தனது கலையுலகப் பயணத்தில் ஒரு வசனகர்த்தாவாக இவர் எழுதிய ஏராளமான திரைப்படங்களில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 28 படங்களுக்கும், எம்ஜிஆரின் 25 படங்களுக்கும் வசனம் எழுதியிருப்பது குறிப்பிடத் தகுந்த ஒன்று.
ஒரே ஒரு பாடல்
புகழ்பெற்ற திரைப்பட வசனகர்த்தாவான ஆருர் தாஸ் 'படித்த பெண்' என்ற படத்திற்காக ஒரு பாடலையும் எழுதியிருக்கிறார் என்பது அநேகர் அறியாத ஒன்று.
இயக்குனர் அவதாரம்
கவிஞர் கண்ணதாசனின் சகோதரரான யுடு சீனிவாசன் தயாரிப்பில் வெளிவந்த ‛பெண் என்றால் பெண்' என்ற திரைப்படத்தை இயக்கி இயக்குநர் அவதாரமும் எடுத்திருக்கிறார் ஆரூர் தாஸ். ஏறத்தாழ 300 திரைப்படங்களுக்கு மேல் வசனமெழுதி சாதனை படைத்திருக்கிறார் ஆரூர் தாஸ்.
மறைந்த இயக்குனர் ஆரூர்தாஸிற்கு ஏ.ரவிச்சந்தர் என்ற மகனும், ஏ.தாராதேவி, ஏ.ஆஷாதேவி என்ற மகள்களும் உள்ளனர்.