இளம் நடிகருடன் காதலா? - கோட் நடிகை விளக்கம் | ஏஆர் ரஹ்மான் பிரிவுக்கும், மோகினி டே பிரிவுக்கும் சம்பந்தம் இல்லை: சாய்ரா பானு வழக்கறிஞர் விளக்கம் | என் மகளை மீட்டு தந்தது செட்டிக்குளங்கரா தேவி தான் : நயன்தாரா அம்மா உருக்கம் | மலையாள வாரிசு வில்லன் நடிகர் மேகநாதன் மறைவு | கிஸ் படத்திலிருந்து அனிரூத் விலகலா? | சம்பந்தி இது சரியில்லை : ‛ராஜாகிளி' பட விழாவில் அர்ஜூன் கலாட்டா | ராம் பொதினேனிக்கு ஜோடியான பாக்யஸ்ரீ போர்ஸ் | சிவகார்த்திகேயனுக்கு வில்லனா? மறுப்பு தெரிவித்த விஷால் | ஹாலிவுட் மியூசிக் மீடியா விருது: ஆடுஜீவிதம் பின்னணி இசைக்காக வென்றார் ஏ.ஆர்.ரஹ்மான் | விஜய் 69வது படத்தில் இணையும் வரலட்சுமி |
பழம்பெரும் திரைப்பட வசனகர்த்தா ஆரூர்தாஸ்(91) சென்னையில் அவரது இல்லத்தில் காலமானார். வயதுமூப்பு காரணமாக அவரது உயிர் மாலை 6.40 மணியளவில் பிரிந்தது. "வாழ வைத்த தெய்வம்" என்ற படம் மூலம் வசனகர்த்தவாக அறிமுகமான இவர், சிவாஜி நடிப்பில் வெளியான இன்றளவும் அண்ணன் - தங்கை பாசத்தை கொண்டாடப்படும் படமான ‛பாசமலர்' படத்திற்கு வசனம் எழுதியதன் மூலம் பிரபலமானார்.
எம்ஜிஆர், சிவாஜி, ஜெமினி உள்ளிட்ட அன்றைய திரை ஜாம்பவான்களின் படங்களுக்கு வசனம், கதை, திரைக்கதை அமைத்துள்ள, ஏறத்தாழ 300க்கும் மேற்பட்ட படங்களுக்கு வசனம் மட்டுமே எழுதி உள்ளார். 'பெண் என்றால் பெண்' என்ற படத்தையும் இயக்கி உள்ளார். இயக்குநர் ஏசி திருலோகசந்தருக்கும், ஆரூர்தாஸ்க்கும் உள்ள நட்பு, நகமும் சதையும் போன்றது. இவர்களது கூட்டணியில் பல வெற்றி படங்கள் உருவாகின.
சில மாதங்களுக்கு முன்பு தான் திரைத்துறையில் இவரது சாதனையை கவுரவிக்கும் விதமாக கலைஞர் நினைவு கலைத்துறை வித்தர் விருது வழங்கப்பட்டது. முதல்வர் ஸ்டாலின் இந்த விருதை அவரது இல்லத்திற்கே சென்று வழங்கினார்.
சென்னை, தி.நகரில் உள்ள ஆரூர்தாஸின் இல்லத்தில் அஞ்சலிக்காக அவரது உடல் வைக்கப்பட்டுள்ளது. இறுதிச்சடங்கு திங்கள் அன்று நண்பகல் 12 மணியளவில் நடைபெறுகிறது.