எந்த நிலையிலும் உமக்கு மரணமில்லை : கண்ணதாசனை புகழ்ந்த கமல் | நான் ஒரு கிளீன் ஸ்லேட் : மமிதா பைஜு | ‛அரசன்' புரொமோ பயராக உள்ளது : அனிருத்திற்கு சிம்பு பாராட்டு | ‛ரெட்ட தல' படத்தின் கதைக்கரு இதுதான் : இயக்குனர் தகவல் | ஹீரோ அவதாரம் எடுக்கும் தேவி ஸ்ரீ பிரசாந்த் | கேரளா திரைப்பட விநியோகஸ்தர் சங்கத்திற்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ் | ஒரு டஜன் வாழைப்பழம் மட்டும் சம்பளமாக பெற்றுக்கொண்டு நடித்த கோவிந்தா | பெண் குற்றச்சாட்டை தொடர்ந்து உதவி இயக்குனர் மீது காவல்துறையில் புகார் அளித்த துல்கர் சல்மான் நிறுவனம் | பாகுபலி : தி எபிக் ரன்னிங் டைம் சென்சார் சான்றிதழ் வெளியானது | எனக்கு தடை விதிப்பவர்களிடம் ஏன் என்று கேளுங்கள்: ராஷ்மிகா |
பாலிவுட் நடிகரும் யூடியூப் விமர்சகருமான கமால் ரஷீத் கான் என்பவர் பிரபலங்கள் குறித்து சர்ச்சையான கருத்துகளை அவ்வப்போது வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருபவர். பாலிவுட் நட்சத்திரங்கள் மட்டுமல்லாமல், மோகன்லால், ரஜினி, அஜித் என தென்னிந்திய முன்னணி நடிகர்களையும் அவர்களது படங்கள் வெளியாகும் சமயத்தில் கிண்டலடிப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளார். கடந்த சில மாதங்களாக எந்த சர்ச்சையிலும் சிக்காமல் இருந்த இவர் தற்போது மோகன்லால் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான திரிஷ்யம்-2 படம் குறித்து கிண்டலாக பதிவிட்டுள்ளார்.
இந்தப்படம் பற்றி அவர் கூறும்போது, “பயங்கரம்.. சோனி டிவியில் ஒளிபரப்பாகும் சிஐடி மூசா தொடர் இந்த படத்தை விட நூறு மடங்கு சிறப்பாக இருக்கிறது” என்று கிண்டல் அடித்துள்ளார். கடந்த வருடம் வெளியான திரிஷ்யம்-2 படத்தை இப்போது ஏன் இவர் தேவையில்லாமல் விமர்சித்து சர்ச்சையை கிளப்புகிறார் என்றால், அதற்கு காரணம் அஜய்தேவ்கன் தான்.
ஆம்.. திரிஷ்யம் 2 படத்தின் ஹிந்தி ரீமேக் வெளியாகி உள்ளது. இதில் அஜய் தேவ்கன், ஸ்ரேயா, தபு என இதன் முதல் பாகத்தில் நடித்த நட்சத்திரங்களே மீண்டும் இதில் இடம் பெற்றுள்ளனர். நேரடியாக ஹிந்தியில் வெளியாகி உள்ள திரிஷ்யம்-2 படத்தை விமர்சித்தால் தனக்கு சிக்கல் வருமென நினைத்து, மலையாளத்தில் வெளியான திரிஷ்யம் 2 படத்தை தாக்குவது போல இப்படி செய்தி வெளியிட்டுள்ளார் கமால் கான்.
இரண்டும் ஒரே கதைதான் என்பதால் மோகன்லால் படத்தை மட்டமாக விமர்சித்தால் ரசிகர்கள் அதை புரிந்துகொண்டு இந்தியில் வெளியாகியுள்ள திரிஷ்யம்-2 படத்தை பார்க்காமல் புறக்கணிப்பார்கள் என்கிற எண்ணத்தில் இவ்வாறு சர்ச்சையைக் கிளப்பி விட்டுள்ளார் கமால் ரஷீத் கான்.