வதந்திகள் நல்ல விளம்பரம்: கிரிக்கெட் வீரருடன் நெருக்கம் பற்றி மிருணாள் தாக்கூர் | இந்தவாரம் 6 படங்கள் ரிலீஸ் : 2025 தமிழ்ப் படங்களின் எண்ணிக்கை 300ஐ நெருங்குமா? | பிளாஷ்பேக்: முதல்வர் ஸ்டாலினுடன் நடித்த பாக்யஸ்ரீ | பிளாஷ்பேக்: திடீர் இயக்குனராகி, காணாமல் போன வில்லன் | மன்னிப்பு டுவீட்... சின்மயி விளக்கம் அளிக்க வேண்டும் : மோகன்ஜி | நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி ஆதாரங்களை சமர்ப்பித்த நிவின்பாலி | இந்த ஆண்டு 3வது யானை படம் | குறும்புக்கார குழந்தை : விநாயகனை நெகிழ வைத்த மம்முட்டி | ரிலீசுக்கு முன்பே 350 கோடி முன் வியாபாரத்தை முடித்த 'திரிஷ்யம் 3' | பாலிவுட் படப்பிடிப்பில் உட்காருவதற்கு நாற்காலி கூட கிடைக்காது; துல்கர் சல்மான் பகீர் தகவல் |

இயக்குனர் ஷங்கர், கமல் நடிக்கும் இந்தியன்- 2 மற்றும் ராம்சரண் நடிக்கும் ஆர்சி -15 ஆகிய படங்களை இயக்கி வருகிறார். ராம்சரண் நடிக்கும் படத்தை ஏற்கனவே இயக்கி வந்தவர், இந்தியன்- 2 படப்பிடிப்பை மீண்டும் தொடங்கியபோது ஆர்சி- 15 படத்திற்கு பிரேக் கொடுத்திருந்தார். இந்த நிலையில் தற்போது மீண்டும் அப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கப் போகிறது. ரூ.150 கோடி பட்ஜெட்டில் தயாராகும் இந்த ஆர்சி -15 படத்தில் ராம் சரணுடன் கியாரா அத்வானி, அஞ்சலி, எஸ். ஜே. சூர்யா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகிறார்கள். இந்த படத்தின் ஒரு சண்டைக் காட்சிக்காக 10 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டதாக ஏற்கனவே ஒரு தகவல் வெளியாகியிருந்தது. இந்த நிலையில் தற்போது இப்படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு நியூசிலாந்தில் நடைபெற இருக்கும் நிலையில், அங்கு படமாக்கப்பட உள்ள ஒரு பாடல் காட்சியை ரூ.15 கோடி செலவில் பிரமாண்டமாக படமாக்க திட்டமிட்டு உள்ளாராம் இயக்குனர் ஷங்கர். அதோடு இதற்கு முன்பு ஷங்கர் படங்களில் இடம்பெற்ற பாடல் காட்சிகளை விடவும் இந்த பாடல் மிக பிரமாண்டமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.




