வித்தியாசமான ஹேர் ஸ்டைலில் வனிதாவின் போட்டோஷூட் | அசீமின் இன்னொரு முகம் : மைனா நந்தினி சொன்ன சீக்ரெட் | தன்னை கேலி செய்த நபருக்கு பொறுமையாக பதில் கொடுத்த ஜாக்குலின் | பாரதி கண்ணம்மா சீசன்2வை உறுதி செய்த இயக்குநர் பிரவீன் பென்னட்! | கல்வி நிலையங்களில் சினிமா விழாக்கள், நிறுத்தப்படுமா ? | 'பாகுபலி 2' வசூலை முறியடிக்குமா 'பதான்' ? | ரூ.100 கோடி வசூலித்த 'மாளிகப்புரம்' | 'வாத்தி' இயக்குனரின் திருமணத்தில் கீர்த்தி சுரேஷ் | இந்தியன் 2 - ஹெலிகாப்டரில் தினமும் வந்து செல்லும் கமல்ஹாசன் | 14 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் விஜய் படத்தில் த்ரிஷா |
செந்தூர் பிலிம் இன்டர்நேஷனல் தயாரிப்பில், சத்ய சிவாவின் இயக்கத்தில், சசிகுமார் நடிப்பில் உருவாகியுள்ள 'நான் மிருகமாய் மாற' திரைப்படம் வரும் நவம்பர் 18ம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது. ஹரிப்ரியா நாயகியாக நடித்துள்ளார். நீண்ட இடைவெளிக்கு பின் இந்த படம் மூலம் தமிழில் நடிக்கிறார். இப்படக் குழுவினர் பத்திரிக்கையாளர்களை சந்தித்து கலந்துரையாடினர். அப்போது படத்திலிருந்து பிரத்யேகமாக, ஒரே டேக்கில் எடுக்கப்பட்ட சண்டைக் காட்சி திரையிடப்பட்டது. தொடர்ந்து படக் குழுவினர் பேசினர்.
நாயகி ஹரிப்ரியா பேசுகையில், ‛‛செந்தூர் பிலிம் இன்டர்நேஷனல் தயாரிப்பில் கடைசியாக 2010ல் வல்லக்கோட்டை திரைப்படம் நடித்தேன். அதன்பின் பல்வேறு கன்னட படங்களில் நடித்துள்ளேன். மீண்டும் தமிழில் நடிக்க ஒரு சரியான கதை மற்றும் குழுவிற்காக காத்திருந்தேன். அப்பொழுதுதான் இயக்குனர் சத்ய சிவா, எனது கன்னட திரைப்படமான பெல்பாட்டம் படத்தினை பார்த்து இந்த திரைப்படத்திற்காக அணுகினார். கதை மிகவும் பிடித்து போக உடன் சம்மதித்தேன்.
இந்தப் படத்திற்கு தமிழ்நாட்டு மட்டும் இல்லாமல் கர்நாடகத்திலும் மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது. ஆனந்தி என்ற கதாபாத்திரத்தில் சசிகுமாரின் மனைவியாக நடித்துள்ளேன். முதலில் என்னை அணுகும் பொழுது படத்தில் எனக்கு ஒரு ஆறு வயது குழந்தை இருப்பதாக கூறினார்கள். எப்பொழுதும் புதிதாக ஒன்றை முயற்சி செய்ய வேண்டும் என்பதே எனது நோக்கம். எனவே இந்த திரைப்படத்தில் நடிக்க ஒப்புதல் தெரிவித்தேன்'' என்றார்.