இந்த முட்டாள் யார் : ஸ்ரேயா கோபம் | பெண் குழந்தைக்கு அப்பாவான பிரேம்ஜி அமரன் | டிச., 8ல் துவங்கும் சூர்யா 47 பட படப்பிடிப்பு | தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கடும் போட்டி | ஏகனுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் | நலமாக இருந்தால்தான் நல்லதைத் தர முடியும்: தீபிகா படுகோனே | ஒரு வாரம் தள்ளிப்போகும் ‛வா வாத்தியார்' | தனுஷ், அவரது மேலாளர் பற்றிய சர்ச்சை : முற்றுப்புள்ளி வைத்த மான்யா ஆனந்த் | 9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? |

தமிழ், தெலுங்கில் சில வருடங்களுக்கு முன்பு வரை முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக இருந்தவர் ஹன்சிகா. தற்போது அதிக பட வாய்ப்புகள் இல்லை என்றாலும் சில படங்களில் நடித்து வருகிறார். ஹன்சிகாவுக்கும் அவரது பிசினஸ் பார்ட்னரான சோஹைல் கத்துரியா என்பவருக்கும் அடுத்த மாதம் டிசம்பர் 4ம் தேதி ராஜஸ்தானில் திருமணம் நடைபெற உள்ளது.
அந்தத் திருமண வீடியோ உரிமையை ஓடிடி தளத்திற்கு ஹன்சிகா விற்றுள்ளதாக ஒரு தகவல் பரவியுள்ளது. சில மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்ட நயன்தாரா அவரது திருமண வீடியோ உரிமையை இப்படித்தான் ஒரு ஓடிடி தளத்திற்கு 25 கோடிக்கு விற்றதாக ஒரு தகவல் பரவியது. அவ்வளவு கோடிக்கு விற்றாரா என்பது வெளியாகவில்லை என்றாலும் திருமண வீடியோ ஓடிடி தளத்தில்தான் வெளியானது. தற்போது நயன்தாரா வழியில் ஹன்சிகாவும் தனது வீடியோ உரிமையை வெளியிட்டுள்ளார் என்கிறார்கள்.
தங்களது சமூக வலைத்தளங்களில் சில 'பிராண்ட்'களின் பொருட்களை விளம்பரப்படுத்த ஒரு பதிவுக்கு லட்சக் கணக்கில் பணம் வாங்கிப் பதிவிடும் சினிமா பிரபலங்கள் இருக்கிறார்கள். இப்போது தங்களது தனிப்பட்ட திருமண நிகழ்வுகளைக் கூட பல கோடிக்கு விற்பது ரசிகர்களிடம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.