சசிகுமார் - சரத்குமாரின் 'நா நா' டிச., 15ல் ரிலீஸ் | அதிர்ஷ்டசாலியாக மாறிய மாதவன் | 'அனிமல்' முதல் நாள் வசூல் ரூ.116 கோடி என அறிவிப்பு | விஜயகாந்த் உடல்நிலையில் பின்னடைவு? | 100 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'சலார்' டிரைலர் | மீனவர் கதாபாத்திரத்தில் ஜி.வி.பிரகாஷ் | காதலியை கரம்பிடித்த குருவி தமிழ்செல்வன் | ‛மெட்டி ஒலி' தனத்தை ஞாபகம் இருக்கா? | சீரியலுக்குள் என்ட்ரி கொடுத்த விஜய் பட நடிகர் | ‛பப்லு' பிரித்விராஜை பிரிந்துவிட்டாரா ஷீத்தல்? |
யு-டியுப்பில் பிரபலமானவர்களின் பட்டியிலில் மைக்செட் ஶ்ரீராம் ஒருவர் . தற்போது சினிமாவில் புதுப்படத்தில் நாயகனாக அறிமுகமாகி இருக்கிறார். என்என் பிக்சர்ஸ் சார்பில் நடிகர் சந்தானத்தின் மைத்துனரான வினோத் துரைசாமி மற்றும் தங்கராஜ் ஆகியோரின் முதல் தயாரிப்பாக, இயக்குநர் விவேக் இயக்கத்தில் இந்த படம் தயாராகிறது. ரொமான்ஸ் காமெடி திரைப்படத்தின் பூஜை சென்னையில் இனிதே நடைபெற்றது.
முழுக்க முழுக்க இளைஞர்களின் வாழ்க்கையை பிரதிபலிக்கும் விதமாக, ரொமான்ஸ் காமெடி ஜானரில் இப்படம் உருவாகவுள்ளது. நடிகர் மைக்செட் ஶ்ரீராம் இப்படத்தில் கதை நாயகனாக வெள்ளித்திரையில் அறிமுகமாகிறார். நடிகை மானசா மற்றும் ரிமி ஆகியோர் நாயகிகளாக நடிக்கின்றனர். தற்போது இப்படத்தின் முன் தயாரிப்பு பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது.