ராஜமவுலி, மகேஷ் பாபு படத்தில் இணையும் பிரியங்கா சோப்ரா | பாலிவுட்டில் கால் பதிக்கும் அமரன் பட இயக்குனர் | ரசிகர்களைக் திருப்திப்படுத்த மோகன்லால் எடுத்த அதிரடி முடிவு | சார்பட்டா பரம்பரை 2 அப்டேட் தந்த ஆர்யா | விடாமுயற்சி படத்தில் விஜய் டிவி பிரபலம் | 2024ம் ஆண்டின் கடைசி படப்பிடிப்பு- பூஜாஹெக்டே வெளியிட்ட பதிவு | மண்ணே இல்லாத சாகுபடி முறை - முதலீடு செய்த சமந்தா | ரஜினியின் ஜெயிலர் 2 புதிய அப்டேட் வெளியானது | முதல் நாளில் உலக அளவில் 9 கோடி வசூலித்த விடுதலை 2 | வனிதா படத்தின் மோஷன் போஸ்டர் வெளியீடு |
தனுஷ் நடித்த 3, கவுதம் கார்த்திக் நடித்த வை ராஜா வை போன்ற படங்களை இயக்கியவர் ஐஸ்வர்யா ரஜினி. சில ஆண்டு இடைவெளிக்கு பிறகு தற்போது லால் சலாம் என்ற படத்தை இயக்கப் போகிறார் ஐஸ்வர்யா. கிரிக்கெட் விளையாட்டை மையமாக கொண்ட கதையில் உருவாகும் இதில் விஷ்ணு விஷால், விக்ராந்த் ஆகிய இருவரும் நாயகர்களாக நடிக்கிறார்கள். லைகா நிறுவனம் தயாரிக்கிறது. நடிகர் ரஜினி சிறப்பு தோற்றத்தில் நடிக்க உள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். சமீபத்தில் இந்த படத்தின் பூஜை நடந்தது.
இந்த நிலையில் தற்போது இப்படத்தில் ரஜினி நடிக்கும் கேரக்டர் பற்றிய ஒரு தகவல் வெளியாகி உள்ளது. அதாவது இந்த லால் சலாம் படத்தில் ரஜினிகாந்த் விக்ராந்தின் அப்பாவாக நடிப்பதாக கூறப்படுகிறது. அவரது கேரக்டர் கதைக்கு திருப்புமுனை ஏற்படுத்தக்கூடிய வகையில் இப்படத்தில் இடம் பெறுவதாகவும் கூறப்படுகிறது.