தயாரிப்பாளர் சங்கம் - பெப்சி மோதல் : பேசி தீர்க்க கோர்ட் உத்தரவு | ஹிந்தி, தெலுங்கில் ரீமேக் ஆன மேஜர் சுந்தரராஜன் படம் | பிளாஷ்பேக் : மர்மயோகியாக மாறிய கரிகாலன் | பிளாஷ்பேக்: எம் ஜி ஆரின் அரசியல் நிலைபாட்டிற்கு அடித்தளமிட்ட “நம் நாடு” | சினிமா ஆன பெண் குல தெய்வங்களின் கதை | தயாரிப்பாளர் மகன் நடிக்கும் ஆக்ஷன் படம் | மீண்டும் வெளிவரும் 'இதயக்கனி' | ஹாரர், திரில்லராக உருவாகும் 'தி பிளாக் பைபிள்' | பிளாஷ்பேக் : பாடல்களுக்காக உருவான படம் | பிளாஷ்பேக் : முதல் படத்திலேயே நீக்கப்பட்ட எஸ்.எஸ்.ராஜேந்திரன் காட்சிகள் |
'பீஸ்ட்' படத்திற்குப் பிறகு நடிகர் விஜய் 'வாரிசு' படத்தில் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை ஒட்டி படம் வெளியாக இருக்கும் நிலையில், தற்போது படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது .
வம்சி இயக்கத்தில் இந்தப் படம் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாக இருக்கிறது. பிரகாஷ் ராஜ், சரத்குமார், கணேஷ் வெங்கட்ராமன், குஷ்பு உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். தில் ராஜூ தயாரித்துள்ள இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு சென்னையில் விறுவிறுப்பாக தற்போது நடைபெற்று வருகிறது. இன்னும் ஐந்து நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு மீதமுள்ளது என கூறப்படுகிறது .
இந்நிலையில் வாரிசு படத்தின் முதல்பாடலான ரஞ்சிதமே இன்று(நவ.,5) மாலை வெளியாக உள்ளது. இதையடுத்து வாரிசு படத்தின் பாடல் வெளியீட்டு விழாவை துபாயில் நடத்த திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. டிச.24-ம் தேதி துபாயில் இசை வெளியீட்டு விழாவை நடத்த இப்படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜூ திட்டமிட்டு அதற்கான முதற்கட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகிறதாம் .