2025 கூகுள் சர்ச் : 3வது இடத்தில் 'கூலி' | வா வாத்தியார் படத்தின் டிரைலர் வெளியானது | மலேசியாவில் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்த அஜித் | ஜனநாயகன் படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கிய ஜீ தமிழ் | டிசம்பர் 9 முதல் 'அரசன்' படப்பிடிப்பு : சிம்பு கொடுத்த தகவல் | ஜி.வி.பிரகாஷின் அடுத்த படம் ஹேப்பிராஜ் | கடந்த சில வாரங்களாக காற்று வாங்கும் தமிழ் சினிமா | புதுமுகங்களின் மாயபிம்பம் | மீண்டும் நாயகியாக நடிக்கும் ரக்சிதா | அவதார் புரமோசன் நிகழ்வில் அர்னால்ட் |

ரஜினியின் மூத்த மகளான ஐஸ்வர்யா ‛3, வை ராஜா வை' ஆகிய படங்களை இயக்கினார். நீண்ட இடைவெளிக்கு பின் ஒரு படத்தை இயக்க உள்ளார். இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. இதில் நாயகனாக அதர்வா நடிப்பதாக இருந்தது. சில காரணங்களால் அவர் நடிக்கவில்லை. இப்போது விஷ்ணு விஷாலும், விக்ராந்த்தும் நாயகர்களாக நடிக்கின்றனர். இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது லைகா நிறுவனம். மேலும் இந்த படத்தில் நடிகர் ரஜினிகாந்த் சற்றே நீண்ட சிறப்பு வேடத்தில் நடிக்க உள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

இந்த படத்திற்கு லால் சலாம் என பெயரிட்டுள்ளனர். இந்த படத்தின் பூஜை இன்று(நவ., 5) காலையில் நடந்தது. அதோடு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரையும் வெளியிட்டுள்ளனர். அதில் கிரிக்கெட் பேட், பால், ஹெல்மெட் போன்றவை எரிவது போன்றும், பின்னணியில் கலவரம் நடந்த இடம் போன்றும் போஸ்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால் இந்தபடம் கிரிக்கெட் விளையாட்டை மையப்படுத்திய படமாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

லால் சலாம் படம் மூலம் முதன்முறையாக தனது அப்பாவை இயக்குகிறார் ஐஸ்வர்யா. ஏற்கனவே இவரது தங்கை சவுந்தர்யா, ‛கோச்சடையான்' படம் மூலம் ரஜினியை இயக்கினார். இப்போது ஐஸ்வர்யாவுக்கும் அந்த வாய்ப்பு கிடைத்துள்ளது.