போர்ச்சுக்கல் நாட்டிற்கு ஹனிமூன் சென்ற சமந்தா- ராஜ் நிடிமொரு! | காத்திருங்கள்: அஜித்தின் 'மங்காத்தா' விரைவில் ரீ ரிலீஸ்! | தனுஷ் 54வது படத்தின் டைட்டில் போஸ்டர் எப்போது? | கதையின் நாயகியாக மாறிய தனுஷ் பட நடிகை! | ரியோ ராஜின் 'ராம் இன் லீலா' முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு! | நானி படத்தில் இணையும் பிரித்விராஜ்! | மீண்டும் ஒரு தெலுங்கு படத்தை ஒப்பந்தம் செய்த துல்கர் சல்மான்! | எனது பழைய போட்டோக்களை பகிராதீர்கள்: மும்தாஜ் வேண்டுகோள் | லெஸ்பியனாக இருந்தேன்: டைட்டானிக் ஹீரோயின் ஓப்பன் டாக் | சிவகார்த்திகேயனுடன் மீண்டும் இணையும் கல்யாணி |

நடிகர் விஜய் சேதுபதி தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் நடித்து வருகிறார். அந்த வகையில் தற்போது தெலுங்கில் உருவாகும் 'மைக்கேல்' படத்திலும் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்திற்கு பிறகு விஜய் சேதுபதி நடிக்கும் படம் குறித்து முக்கிய தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தை 'காக்காமுட்டை', குற்றமே தண்டனை, ஆண்டவன் கட்டளை போன்ற படங்களை இயக்கிய இயக்குனரான மணிகண்டன் இயக்கவுள்ளார்.
இந்த படத்தில் கதையின் நாயகனாக நடிகர் விஜய் சேதுபதி நடிக்கவுள்ளார். மேலும் மலையாள நடிகர் மம்முட்டி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். முதல்முறையாக மம்முட்டியும், விஜய் சேதுபதியும் இணைவது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒடிடி தளத்திற்காக உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் துவங்க உள்ளது .